01 (85)

கலைப்புலி தாணு தயாரிக்கும் படங்களைப் பற்றி விதம்விதமான செய்திகள் மீடியாக்களில் வெளியாகும். காரணம், அவரே தனக்கு நெருக்கமான செய்தியாளர்களுக்கு போன் செய்து தன் படம் குறித்த எக்ஸ்க்ளுசிவ் செய்திகளை கொடுப்பார். அதன்படி விஜய்யை வைத்து அவர் தயாரித்து வரும் தெறி படம் பற்றியும் தினம் தினம் புதிய செய்திகள்.

தெறி படத்தில் நான்குவிதமான கெட்டப்புகளில் விஜய் நடிக்கிறார்…, ரோப் சண்டைக்காட்சி ஒன்றிற்காக தொடர்ந்து 40 மணி நேரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் விஜய்…, அண்டர்வாட்டரில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது…, ஹாலிவுட் ஸ்டன்ட் கலைஞர்களை வைத்து சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன… என ‘தெறி’ படத்தைப் பற்றி வரும்தினமும் புதிய செய்திகள் வெளியாகி வந்தன.

hqdefault (4)

தெறி பற்றி தற்போது இன்னொரு செய்தி. விஜய்யின் மகள் திவ்யாவும் இப்படத்தில் நடிக்கிறார், அதுவும் விஜய்யின் மகளாகவே நடிக்கிறார். ஏற்கெனவே தெறி படத்தில் விஜய்யின் மகளாக மீனாவின் மகளும் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்போது விஜய்யின் இரண்டு மகள்களில் ஒருவராக விஜய்யின் மகள் திவ்யாவையே நடிக்க வைத்திருக்கிறாராம் அட்லி.

‘வேட்டைக்காரன்’ படத்தில் ‘நான் அடிச்சா தாங்க மாட்ட…’ என்ற பாடலில் விஜய்யின் மகன் சஞ்சய், அவருடன் இணைந்து நடனமாடினார். இப்போது மகளையும் நடிக்க வைத்துள்ளார் விஜய்.

 

Comments

comments