NTLRG_160119153134000000

ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், பூலோகம் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்ததால், ஜெயம் ரவியின் மார்க்கெட் தற்போது உச்சத்தில் இருக்கிறது. லட்சுமணன் இயக்கத்தில் நடித்த ரோமியோ ஜுலியட் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து மோகன்ராஜா இயக்கத்தில் வெளியான ‘தனி ஒருவன்’ சூப்பர்ஹிட் வெற்றியைச் சுவைத்தது. அதோடு நீண்டநாட்களாக வெளியாகாமல் கிடப்பில் கிடந்த ‘பூலோகம்’ படமும் வெளியாகி, வெற்றியடைந்தது. அதுமட்டுமல்ல, ஜெயம் ரவிக்கு நல்ல பெயரையும் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.

இந்நிலையில் நாணயம், நாய்கள் ஜாக்கிரதை படத்தைத் தொடர்ந்து சக்தி சௌந்தர் ராஜன் இயக்கும் ‘மிருதன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி. அவரது அடுத்த படமாக காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது -‘மிருதன்’. ‘தென்னிந்தியாவின் முதல் ஸோம்பி படம்’ என்ற பெருமையோடு வெளியாகவிருக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி போலீஸாக நடித்திருக்கிறார்.

‘தனி ஒருவன்’ படத்தில் மித்ரன் ஐ.பி.எஸ். ஆக நடித்தார் ஜெயம் ரவி. ‘மிருதன்’ படத்தில் டிராபிக் போலீஸாக ஜெயம் ரவி நடித்திருக்கிறார். இப்படத்தின் போஸ்டரில் டிராபிக் போலீஸான ஜெயம் ரவி கையில் துப்பாக்கி வைத்திருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது. டிராபிக் போலீஸ் கையில் துப்பாக்கியா என்ற கிண்டலும், எதிர்பார்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது.

 

Comments

comments