நடிகர் கமலஹாசன் நடித்த ‘விருமாண்டி’ திரைப்படத்தில் காட்டப்படும் காளை, தற்போது கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து, நூற்றுக்கணக்கான ஜல்லிக்கட்டுக் காளைகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டு, இறைச்சிக்காக கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டன.

06CMVIRUMAANDI_1449851g

ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வந்த உரிமையாளர்கள் ஏராளமானோர், ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, காளைகளை இறைச்சிக்காக விற்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறுவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கடந்த ஆண்டு, நடிகர் கமலஹாசன் நடித்த விருமாண்டி திரைப்படத்தில் தோன்றிய முரட்டுக் காளை, கேரளாவுக்கு அதன் உரிமையாளரால் விற்கப்பட்டது.

virumandi kaalai

இதனை அறிந்த வெள்ளிங்கிரி கோசாலை நிர்வாகம், விருமாண்டி காளை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுக் காளைகளை மீட்டு பராமரித்து வருகிறது. இந்தக் காளைகள் அனைத்தையும் வரும் பொங்கலையொட்டி பொதுமக்கள் பார்வையிடலாம் என்று கோசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கோசாலையில் 1400 மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 206 மாடுகள் ஜல்லிக்கட்டில் இடம்பெற்ற மாடுகள் ஆகும் என்பது கவனிக்கதக்கது.

Comments

comments