சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை ரஷ்ய கலாச்சார மையத் அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

pisasu_2245903f

காலை 10.00 மணி

Samsaram Athu Minsaram Dir.: Visu Tamil | 1986 | 145′ Tribute to Aachi Manoram

ஏவிஎம் நிறுவனம் தயாரித்து 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் சம்சாரம் அது மின்சாரம். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரகுவரன், லட்சுமி, டெல்லி கணேஷ், மனோரமா, கமலா காமேஷ், விசு, திலீப், கிஷ்மு, ஹாஜா ஷெரிப், வாகை சந்திரசேகர், குள்ளமணி, ஓமகுச்சி, நரசிம்மன்ராஜ், சங்கர், மாதுரி, லலிதா சர்மா உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே பங்கேற்றுள்ளது. இப்படத்திற்கு சிறந்த மாநில மொழி பொழுதுபோக்குப் படத்திற்கான தேசிய விருது பெற்றது. குடும்ப உறவுகள் சிதைந்து வருவதை வலுமிக்கப் பாத்திரப் படைப்புகளைக் கொண்டு பேசிய படம் இது. இதில் முக்கியமாக விசு, மனோரமா, லட்சுமி போன்றவர்களின் நடிப்பு குறிப்பிடும்படியானது.

மதியம் 1.30 மணி

Maya Dir.: Ashwin Saravanan Tamil | 2015 | 140′

இரண்டு கதைகள் திரையில் ஓட ஆரம்பிக்கின்றன. ஒரு கதை, மாநகரின் புறத்தே இருக்கும் ‘மாயவனம்’ என்ற காட்டையும் மனநலக் காப்பகம் ஒன்றின் மர்மங்களையும் பற்றி யது. காப்பகத்தில் கர்ப்பவதியாகச் சேர்க்கப்பட்டு இறந்துபோன ஒரு பெண்ணைப் பற்றி ஆராய்ந்து எழுதப்படும் தொடர்கதையின் கதாசிரியர், அதை வெளியிடும் பத்திரிகை முதலாளி, அவரது மனைவி, அதற்குப் படம் வரையும் ஓவியர் ஆகியோரின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் வழியே பரபரப்பாக நகர்கிறது அந்தக் கதை.

இரண்டாம் கதையில் கண வரைப் பிரிந்து கைக்குழந்தை யுடன் வாழும் அப்சரா (நயன்தாரா) என்ற பெண் பார்வையாளர் களுக்கு அறிமுகப்படுத்தப் படுகிறார். கணவன் மீதிருக்கும் மனத்தாங்கல் காரணமாகத் தனித் துப் போராடும் அவருக்குக் கடும் பண நெருக்கடி. பேய்க் கதை என்றாலும் தாய்மையின் தவிப்பே கதையின் அடிநாதம். வஞ்சிக்கப்படும் பெண் களின் கதையே மாயவனமாக விரிகிறது.

மாலை 4.15 மணி

Pisasu Dir.: Myskin Tamil | 2014 | 113′

தமிழில் பேய்ப் படம் ரசிப்பவர்களை பயம் எனும் கிளர்ச்சியைத் தாண்டி, அவர்களை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் அபார முயற்சிதான் ‘பிசாசு’.

சலித்துப் போன காட்சிகள் நிரம்பிய பேய்ப் படங்களைப் பார்த்து வந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, மனிதத்தின் மகத்துவத்தையும் பேரன்பின் மேன்மையையும் சொல்வதற்காக, உணர்வுபூர்வமான பிசாசுவை அறிமுகப்படுத்தி இருப்பதை நிச்சயம் கொண்டாட வேண்டும். பாடல்களுக்கும் காமெடி ட்ராக்கையும் ஒதுக்கிவிட்டு, அசல் சினிமாவுக்கு தமிழ் ரசிகர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்று பேச்சளவில் மட்டுமின்றி, அதை செயல்படுத்திக் காட்டியிருக்கும் விதத்தில் மிஷ்கின் மின்னுகிறார்.

படத்தின் முக்கியமான ஒரு காட்சியில், ஒரு பாட்டி கேரக்டர் மெல்ல நம்மை நோக்கி நெருங்குகிறது. அவர் முகத்திலும் உடலசைவுகளிலும் அப்படி ஒரு கொந்தளிப்பு. அவர் சொல்ல முற்படும் விஷயம் அவ்வளவு கடுமையானது என்பது பார்வையாளனுக்குப் புரிகிறது. ஆனால், அவர் பேசவே இல்லை. அந்த இடத்தில் பார்வையாளனே படைப்பாளி ஆகிறான். அந்தப் பாட்டி பேச வேண்டிய வசனத்தை தனது புரிதல், மனநிலைக்கு ஏற்ப தானே எழுதிக்கொள்கிறான் பார்வையாளன். இதுபோன்ற அணுகுமுறைதான், மிஷ்கின் என்ற படைப்பாளியை ‘ப்யூர் சினிமா’ கிரியேட்டராக உயர்த்திப் பிடிக்கிறது.

மாலை 6.45 மணி

Student’s films from MGR Govt. Film & TV Institute. 11 Short Films

Comments

comments