சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை கேஸினோ அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 9.45 மணி

DEGRADE| DIR.:ARAB NASSER & TARZAN NASSER | PALESTINE|2015|84’

பாலஸ்தீன தலைநகரான காஸா ஸ்ட்ரிப்பின் சமகாலத்தைப் பேசும் படம். கிறிஸ்டியனே அழகுநிலையத்தில் இப்போதெல்லாம் நிறைய பெண் வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். அன்று கூட ஒரு விவாகரத்து பெற்ற பெண், ஒரு மத ஈடுபாடு கொண்ட பெண், போதை மருந்துகளுக்கு அடிமையான மணமகள் ஒருத்தி உள்ளிட்ட பலரும் நிறைந்திருந்தார்கள். ஆனால் அன்றைய அவர்களது நிம்மதியான ஓய்வுநாளைக் கெடுக்கும்விதமாக கடைக்குநேர் எதிரே சாலையில் துப்பாக்கிச்சூடு நடந்துகொண்டிருந்தது. ஒரு கொள்ளைக்கூட்டம் ஒரு சிங்கத்தை காஸா உயிரியல் பூங்காவிலிருந்து திருடிக்கொண்டு வந்து வந்திருந்தது. அதில் முக்கியமான ஹமாஸ் ஒரு பழைய கணக்கைத் தீர்க்கும்பொருட்டு அங்கு அவள் கடை எதிரே ஒரு இருக்கை போட்டு அந்த சிங்கத்தோடு வந்து அமர்ந்திருந்தான். தயவுசெய்து இங்கிருந்து போய்விடு என அவள் அவனைக் கேட்டுக்கொள்கிறாள்.

காலை 12.00 மணி

MY2 |DIR.:SLOBODANKA RADUN | CZECH|2014|100’

தன் வாழ்க்கையில் புதிய மாற்றம் வேண்டி, எம்மா அவளுடைய பெற்றோர்களிடமிருந்தும் உடன் வாழும் கணவனிடமிருந்தும் ஓடிவந்துவிடுவாள். அவளுடைய சிகை அலங்காரம் செய்யும் டோனியோடு கூட அவளுக்கு அரிதாகத்தான் பழக்கம் உண்டு. அவனுடைய அப்பார்ட்மென்டுக்கு வந்து அவள் மறைந்துகொள்கிறாள். அங்கு அவளை யாரும் பார்க்க முடியாது. ஆரம்பத்தில் அவர்கள் இருவரும் அந்நியர்களாகத்தான் இருந்தனர். தப்பிக்கும் ஆசைகொண்ட இருவரையுமே அவர்கள் எண்ணம் இணைக்கிறது.

மதியம் 2.45 மணி

THE GREATEST HOUSE IN THE WORLD / LA CASA MÁS GRANDE DEL MUNDO | DIR.:ANA V. BOJORQUEZ & LUCIA CARRERAS | GUATEMALA|2015|74’

ரோசியோ, கர்ப்பமாக இருகும் தனது தாயுடனும், பாட்டியுடனும் மலைப்பகுதியில் வசிக்கிறாள். தனது தாய்க்கு முன் கூட்டியே பிரசவம் நடப்பதால், அவர்களது ஆட்டு மந்தையை தனியாக பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ரோசியோவுக்கு வருகிறது. ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு ஆட்டை தொலைத்து விடுகிறாள். அதை தேடிப் போகையில் மற்ற ஆடுகளும் தோலைந்து போக, சோகத்தில் மூழ்குகிறாள். இந்த பயணத்தில், இயற்கை அவளுக்கு கற்றுக் கொடுக்கும் விஷயங்களும், தன் அப்பாவித்தனம், பயத்தைத் தாண்டி அவளது பயணம் இந்தப் படம். நமக்கு தெரியாத, புரியாத, பயப்படும் விஷயங்களை எதிர்கொள்ளும் போது நாம் அனைவரும் குழந்தைகளே என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது.

மாலை 4.45 மணி

THE DARK HORSE | DIR.:JAMES NAPIER ROBERTSON | NEW ZEALAND|2014|124’

ஜெனிசிஸ் போடினி என்பவரது நிஜ வாழ்க்கை சம்பவங்களின் திரை வடிவம் இது. செஸ் விளையாட்டில் சாம்பியனாக விளங்கும் ஜெனிஸிஸ் கடுமையான பைபோலார் டிஸ்ஆர்டர் என்ற மனநோயால் பாதிக்கப்படுகிறார். மனநல காப்பக்கத்திலிருந்து வரும் அவர் உள்ளூரில், விளிம்பு நிலை குழந்தைகளின் கூட்டம் ஒன்றுக்கு செஸ் பயிற்சியை ஆரம்பிக்கிறார். ஆக்லாந்தில் நடக்கும் செஸ் போட்டி ஒன்றில் அவர்களை பங்கெடுக்க வைக்க முயற்சிக்கிறார். இந்த பயணத்தில் தனது மகனைப் பற்றியும் அறிந்து கொள்கிறார்.

மாலை 7.15 மணி

STANDING TALL / LA TÊTE HAUTE DIR.: EMMANUELLE BERCOT | FRANCE |2015|120’

மலோனி எனும் சிறுவனை அவனது 6வது வயதில் சிறார்ப்பள்ளியில் கண்டெடுக்கிறாள் அவனது வளர்ப்புத்தாய். அவனை மிகவும் அன்பாக வளர்க்கிறாள். ஆனால் அவன் பழைய மாதிரியேதான் இருக்கிறான். பதின்ம வயதுக்கு வரும்போது அவன் கார்களைத் திருடத்தொடங்குகிறான். அவனுடைய வழக்குகள் ஏற்கெனவே அவனுடைய வழக்குகளை எதிர்கொண்டவரிடமே வருகிறது. அவனுடைய சிறார் நீதிமன்ற நீதிபதியும், மோசமான குழந்தைப்பருவத்திலிருந்து தப்பிப் பிழைத்த வழக்குப்பணியாளர் யானும் மலோனியைப் பின்தொடர்ந்து அவனை பல்வேறு பிரச்சனையிலிருந்து காக்கிறார்கள். பின்னர் மலோனி கண்டிப்பான கல்வி மையத்தில் அனுப்பிவைக்கப்படுகிறான். சிறப்பு(க்கல்வி) மாணவியான இளம்பெண் டெஸ் என்பவளிடமிருந்து வாழ்க்கைக்கான நம்பிக்கையை பெறுகிறான். 2015 கேன்ஸ் திரைப்படவிழாவில் பாம்டி’ஓர் திரைப்படவிருது பெற்ற திரைப்படம்.

Comments

comments