சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை கேஸினோ அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

heneral_2686925f

காலை 9.45 மணி

Baby Steps Dir.:Barney Cheng Taiwan & USA|2015|103’

டானி ஒரு தைவானிய அமெரிக்க மனிதன். அவனது மனைவிக்கு டேட்டுக்கு ஒரு குழந்தை வேண்டும். ஆனால் உலகளாவிய வாடகைத்தாய்களின் உலகம் மிகவும் சிக்கலானாது. எந்தப் பாரம்பரியும் அற்றது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இப்பிரச்சனையில் தலையிடுகிறார் மா என்பவர். தைபெய் நகரிலிருந்து மா என்பவரின் வழியே இப் பிரச்சனையின் ஒவ்வொரு அம்சத்தையும் அலசி ஆராய்கிறது பேபிஸ்டெப்ஸ்.

காலை 12.00 மணி

Heneral Luna Dir.:Jerrold Tarog Philippines|2015|118’

பிலிப்பைன்ஸுக்கும் அமெரிக்கவுக்கும் போர் நடந்த பதினேழாம் நூற்றாண்டுக் காலக் கதையை இப்படம் பேசுகிறது. கடும் கோபம் மிக்க தளபதியான ஃபிலிப்பினோ, அமெரிக்கப் படையைவிட வல்லமைமிக்க எதிரியாக திகழ்கிறான். 1898, ஜெனரல் அன்டோனியோ லுனா (ஜான் ஆர்சில்லா), புரட்சிப்படையின் தளபதியாக முன்னின்று சண்டையை நடத்துகிறான். பிலிப்பைன்ஸ் முன்னூறு ஆண்டுகள் கழித்து ஸ்பானிய காலனியாக மாறுவதோடு மக்கள் விருப்பத்திற்கு மாறாக அமெரிக்காவின் ஆட்சியின் கீழ் வருகிறது. ஜெனரல் லூனா அமெரிக்காவிலிருந்து விடுவித்துக்கொள்ள சுதந்திரத்திற்காக சண்டையிட விரும்புகிறான். ஆனால் மேல்தட்டு உறுப்பினர்கள் அமெரிக்கவுடன் உடன்பாட்டை மேற்கொள்ள விரும்புகின்றனர்.

மதியம் 2.45 மணி

Journey to the Shore |Kishibe no tabi Dir.: Kiyoshi Kurosawa Japan|2015|128’

கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட இயக்குநருக்கான அன் சர்ட்டெய் ரிகார்ட் பிரிவில் விருதுபெற்ற படம். டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. மிசூகியின் கணவன் (யூசூகே) மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிவிட்டான். அவன் திடீரென திரும்ப வரும்போது அவள் பதட்டப்படவில்லை. மாறாக மிகவும் ஆச்சர்யத்தோடு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டீர்கள் என்றுதான் கேட்கிறாள். யோசூகெ அவளுடன் ஒரு பயணத்தை மேற்கொள்ளப்போவதாக கூறும்போது அவள் அதை ஏற்றுக்கொள்கிறாள்.

மாலை 4.45 மணி

Short Skin| Dir.:Duccio Chiarini Italy|2014|86’

தனது நெருங்கிய தோழியை இரவுபகலாக நினைத்துக்கொண்டிருப்பவன் அவன். அவனுடைய தந்தையும் அவனுடைய தங்கையும் தொடர்ந்து பாலியல் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பவர்கள். ஆனால் எட்வார்டோ ஒரு நுட்பமான பிரச்சனையில் இருக்கிறான். அவனுக்கு பாலியல் என்பது ஒரு மெல்லிய புண்ணாக இருக்கிறது. சுய இன்பம் அனுபவிப்பது கூட வேதனையான ஒன்றுதான் அவனுக்கு.

பல்வேறு தயக்கங்கள் அச்சங்களுக்குப் பிறகு ஒருவழியாக அறுவை சிகிச்சை ஒத்துக்கொள்கிறான். பிறகு அவனிடம் மாற்றம் ஏற்படுகிறது. அவனது விருப்பத்தை உணர்ந்த அவனது ரகசிய காதலி பியான்கா அவனை வெளியில் ஒரு இடத்திற்குச் செல்ல அழைக்கிறாள். இருவரும் செல்கின்றனர். அங்கு அவனது முயற்சி தோல்வியில் முடிகிறது. ஒரு மெல்லிய இதயம் படைத்த 17வயது இளைஞனின் ஆசைகளை வேதனைகளை மிகச் சிறப்பாக ஒரு கோடைக்கால காதல் கதையுடன் இணைத்து அழகாக கூறியுள்ள படம்.

மாலை 7.15 மணி

The Midwife|Kätilö Dir.:Antti Jokinen Finland|2015|119’

இரண்டாம் உலகப்போரின் முக்கியமான ஐரோப்பியப் போர் முனையான, ஃபின்லாந்தின் லேப்லாந்து மாகாணத்தின் முக்கியமான காதல் நாடகம் இது. காட்ஜா கெட்டுவின் புகழ்பெற்ற நாவலான த மிட்வைஃப், லேப்லாந்து மருத்துவச்சிக்கும், நாஜிப்படை அதிகாரிக்கும் இடையேயான காதலைப் பற்றிப் பேசுகிறது. 1944- 45 களில் ஃபின்லாந்துக்கும், ஜெர்மனி ராணுவத்துக்கும் இடையில் நடந்த போரின் பின்புலத்தில் நடந்த காதல் கதையிது. காதலையும், போரையும் வெற்றி கொள்ளும் காவியமாகப் போற்றப்படுகிறது.

Comments

comments