- உட்லண்ட்ஸ் -

காலை 11.30 மணி

Yona | Dir.:Nir Bergman | Israel | 2014 |100’

பிரபல இஸ்ரேலிய கவிஞரான யோனா வாலாச்சைப் பற்றிச் சொல்லும் படம் யோனா. 18 வயது யோனா, பள்ளியில் இருந்து நின்று 1960-களின் சிறந்த கலைஞர் ஆகிறார். தன்னை ஆட்கொண்ட கவிஞரான யெய்ர் ஹர்விட்ஸ் மெய்ர் வியஸெல்டியரைப் பின்பற்றி யோனா, கசக்கும் உண்மைகளை, தன்னுடைய எழுத்துக்களில் கற்பனை கலந்து எழுதுகிறார். அதன் விளைவாக மனநல மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படுகிறார். அந்த வளையத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். ஆனாலும் அது கடைசி வரையிலும், அவரின் வாழ்க்கையில் உடன் வந்துகொண்டே இருக்கிறது.

மதியம் 2.00 மணி

Mountains may Depart | Dir.: Jia Zhang-Ke | China |2015 |120’

கேன்ஸ் திரைப்படவிழாவில் போட்டிக்குத் தேர்வான படம் இது. சீனா, 1999களின் இறுதி. டாயோ, ஃபென்யாங்கைச் சேர்ந்த ஒரு இளம் பெண், தனது இரண்டு குழந்தைப் பருவ நண்பர்களான ஸாங் மற்றும் லியாங் ஆகியோரை காதலிக்கிறாள். ஸாங்கிற்கு சொந்தமாக ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. அவனுடைய எதிர்காலம் நம்பிக்கைக்குரிய ஒன்றுதான். லியாங் நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்கிறான். தன்னுடைய காதல் இதயத்தை இரண்டு மனிதர்களுக்காக பிரித்துக் கொடுக்கிறாள்.

டாயோ, தனது விதியை நிர்ணயிப்பதற்கும் எதிர்காலக் குழந்தையான டாலருக்காகவும் இதில் ஒன்றை தேர்வு செய்தாக வேண்டும். ஆழமாக மாறிக்கொண்டிருக்கும் சீனாவுக்கும் உறுதியான சிறந்த வாழ்க்கைக்கு உத்தரவாதமான ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ஊடாடும் நம்பிக்கை, காதல் என ஏமாற்றமிகுந்த இந்த கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளப்போகும் தங்களது தலைவிதிகளை அழகாக பேசுகிறது இத்திரைப்படம்.

காலை 4.30 மணி

The Forbidden Room / A tiltott szoba | Dir.: Guy Maddin & Evan Johnson | UK | 2015 |130’

பெர்லின் திரைப்பட விழா,சூடான்ஸ் உலகப்படவிழா, டொண்டா திரைப்பட விழா, நியூயார்க் திரைப்படவிழாக்களில் தேர்வான படம். தண்ணீருக்கடியில் பல மாதங்கள் மாட்டிக் கொண்டுள்ள ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் மர்மமான முறையில் ஒரு விறகு வெட்டுபவன் தோன்றுகிறான். கப்பலில் இருப்பவர்கள் பயத்தில் அந்த கப்பலிலிருந்து தப்பிக்க பார்க்கின்றனர்.

மாலை 7.00 மணி

My Mother / Mia Madre | Dir.:Nanni Moreti | Italy | 2015 | 106’

மார்கரெட்டா ஒரு திரைப்பட இயக்குநர். அவர் படபிடிப்புத் தளத்தில் ஒரு பாத்திரமாகவே முழுமையாக மாறிவிடும் அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகர் பேரி ஹக்கின்ஸ்ஸை வைத்து படபிடிப்பு நடத்துகிறார். படப்பிடிப்புக்கு அப்பால் மார்க்கெரெட்டா உடல்நிலை மோசமாக இருக்கும் தன் தாயையும் பருவ வயதில் இருக்கும் மகளையும் எதிர்கொள்கிறார். அப்போது அவர்களுக்கு முழுமையாக உதவமுடியவில்லையே என தனது கையறுநிலையை எண்ணி ஏங்குவதோடு வாழ்வின் மீது பிடிமானம் கொள்ள முயற்சிப்பார். 1994ல் பிரிக்ஸ் விருது 2001ல் பாம் டி ஓர் விருது உள்ளிட்ட மிகப்பெரிய விருதுகளைப் பெற்ற இத்தாலிய இயக்குநர் நானி மொரெடியின் படம் இது.- உட்லண்ஸ் சிம்பொனி -

காலை 11 மணி

Masaan | Dir.: Neeraj Ghaywan | Hindi | 2015 | 109’

கேன்ஸ் திரைப்படவிழாவில் இருபிரிவுகளில் விருதுபெற்ற ஒரே இந்திய திரைப்படம். கங்கையின் இரு கரைகளிலும் நடைபெறும் இரு வெவ்வேறு காதல் கதைகள். முதல் கதை கதையில் ஆற்றங்கரையில் சடங்குப்பொருள்கள் விற்கும் சிறு கடை நடத்திவரும் ஒருவரின் மகளைப் பற்றியது. மகள் ஈடுபட்ட தவறான சம்பவத்திற்காகவும் அப்போது நேர்ந்த காதலன் மரணத்திற்காகவும் அப்பெண்ணின் தந்தையை அடிக்கடி மிரட்டி பணம் பறிக்கிறார் உள்ளூர் போலீஸ் அதிகாரி. இதனால் ஏற்கெனவே சிரமத்தில் உள்ள அக்குடும்பம் மேலும் சிக்கல்களையும் துயரத்தையும் சந்திக்கிறது. மகள் மீது வெறுப்பை வளர்த்துக்கொள்ளும் தந்தையிடமிருந்து மகள் பிரிந்து படிக்கவும் வேலை பார்க்கவும் வேறு நகரத்திற்கு இடம்பெயர ஆற்றின் இன்னொரு கரைக்கு சென்று அங்கிருந்து வேறொரு கரைக்குப் புறப்பட தயாராக ஆற்றின் படிக்கட்டில் அமர்ந்து காதலன் வழங்கிய பரிசுப்பொருளை ஆற்றில் போட்டுவிட்டு அமர்ந்திருப்பாள்.

அதேபோல கங்கையின் இன்னொரு கரையில் நடக்கும் காதல் கதை. அதுவும் தோல்வியில் முடிய காதலித்தவள் தற்கொலை செய்துகொள்கிறாள். தற்செயலாக அவளது பிணத்தை அவனே கங்கை ஆற்றங்கரையில் எரிக்கும் நிலை ஏற்படும் சடலத்தின் முகத்தைப் பார்த்துக் கதகிறான் காதலன். அவனும் துயரத்தை ஆற்றமுடியாமல் ஒருநாள் அங்கிருந்து புறப்பட்டுவிட தீர்மானித்து பயணப்பையை எடுத்துக்கொண்டு ஆற்றின் படிக்கட்டில் வந்து அமர்வான்..

மதியம் 2.30 மணி

Reveron / Reveron | Dir.:Diego Rísquez | Venezuela | 2011 | 110’

வெனிசுலாவில் 1889–1954 ல் வாழ்ந்த ஓவியர் ரேவரானின் வாழ்க்கையை பிரதிபலுக்கும் படம் இது. தன்னுடைய முந்தையப் படங்களில் பரிசோதனை முயற்சிகளில் அதிகம் ஈடுபட்ட இயக்குநர் டீஜோ ரிஸ்கெஸ் இப்படத்தில் ரேவரானின் காதல், நட்பு, அரசியல் ஈடுபாடு, இயற்கை மீதான அக்கறை என பலதரப்பட்ட விஷயங்களை ரம்யமாக வெளிபடுத்தி இருப்பார்.

ரேவரான் என்ற ஓவியர். தனது வாழ்நாள் முழுவதையும் ஓவியத்துக்காகவே செலவழித்தவர். இறுதி நாட்களில் தனது வாழ்க்கைத் துணை ஜுவானிதாவை சந்திக்க நேரிடுகிறது. அதன் பின்னர் அவரது வாழ்வின் மிச்ச நாட்கள் ஒவ்வொன்றும் ஜுவானிதாவுக்காகவே நகர்கின்றது.

மாலை 5.00 மணி

Letter Box / Dakbaksho | Dir.: Abhijit Choudhury | 2015 | Bengali |112′

தந்தி சேவை முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது. தபால் சேவையும் தன்னுடைய இறுதி நாளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. பல வருடங்களாக செயல்படாமல் இருந்த தபால் பெட்டி ஒன்றிலிருந்து, ஒருவர் கடிதங்களை எடுக்கிறார். அந்தக் கடிதங்கள் அனைத்திலும் முகவரி இல்லை. யாரோ ஒருவரைக் கொலை செய்வதற்காகத் தீட்டப்பட்ட திட்டங்கள் அதில் இருக்கிறது. மறுபுறம், புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநர் ஸ்ரீஜா, சில காரணங்களுக்காக தன்னுடைய வேலையில் நாட்டமில்லாமல் இருக்கிறார். மர்மமான புகைப்படக்காரர் ஒருவர், ஸ்ரீஜாவைச் சந்திக்க அவரது வீட்டுக்குச் செல்கிறார். நடக்கும் சம்பவங்கள் அனைத்துக்கும் காரணம் என்ன, இதில் தபால் பெட்டி எதற்கு வருகிறது? படத்தின் இறுதியில், முடிச்சுகள் அனைத்தும் மெதுவாய் தங்களை அவிழ்க்கத் தொடங்குகின்றன…

மாலை 7.30 மணி

My Skinny Sister / Min lilla syster | Dir.:Sanna Lenken | Sweden | 2015 |105’

12 வயது ஸ்டெல்லா அற்புதமான இளமைப் பருவத்தில் அடியெடுத்து வைக்கிறாள். அவளுடைய முன்மாதிரியும் மூத்தவளுமான கத்ஜா பனிச்சறுக்கு விளையாட்டில் சாகசங்கள் புரியக்கூடியவள். ஸ்டெல்லா, அவளுடைய பயிற்சியாளர் ஜெர்மனியைச் சேர்ந்த ஜேக்கப்பை நேசிப்பதோடு அவரைப் பற்றியும் கவிதைகள் எழுதிவைத்திருப்பாள். இரண்டுங்கெட்டான் வயதில் அவள் கிறுக்குவதை கத்ஜா பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அவர்களுக்குள் வேறொரு சிக்கலும் வருகிறது. இக்கதை சகோதரிகளுக்குள் ஏற்படும் பொறாமை, காதல், வஞ்சனை ஆகியவற்றை அரவணைப்பு, ஆழம், சிரிப்பு என பலவிதமாக கூறுகிறது. ஸ்வீடன் பெண் திரைக்கதையாசிரியர் சன்னா லெங்கன் தனது சொந்த அனுபவங்களிலிருந்து இக்கதையை எழுதி இயக்கியுள்ளார்.

Comments

comments