- உட்லண்ட்ஸ் -

சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை உட்லண்ட்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 11.30 மணி

A monster with a thousand Heads |Un monstruo de mil cabezas Dir.:Rodrigo Plá France|2015|74’

சோனியா போனெட் ஒரு குடும்பத் தலைவி. அவளின் கணவன் தொடர்ந்து உயிர் வாழ்வதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு தேவையான உதவிகளைச் செய்ய காப்பீட்டு நிறுவனம் மறுக்கிறது. அதிலிருந்து, எல்லா பொறுப்புகளையும் தன் கைகளில் எடுத்துக் கொள்கிறாள் சோனியா. அதிகார மையத்தாலும், விருப்பமில்லாத தொழிலாளர்களாலும், விரக்தியின் விளிம்புக்குச் செல்கிறாள் சோனியா. தன்னுடைய மகனுடன் கைகோத்து, சமூக அமைப்புக்கு எதிராகப் போராட ஆரம்பிக்கிறாள் சோனியா.

மதியம் 2.00 மணி

Warsaw by Night Dir.: Natalia Koryncka-Gruz Poland|2015|99’

1944-ல் நடந்த வார்சா எழுச்சியின் போது ஏற்பட்ட பிரச்சனைகளைப் பற்றிப் பேசுகிறது. ரத்தத்தால் எழுதப்பட்ட கொடூரமான சாகசங்களையும், நட்பையும் காதலையும் சொல்கிறது வார்சா’44.

காலை 4.30 மணி

The Tournament | Le tournoi Dir.: Elodie Namer France|2015|83’

புடாபெஸ்ட் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் ஏழு நாட்களாக ஒரு செஸ் போட்டி நடக்கிறது. இன்னும் முதிர்ச்சியடையாத மேதையாக திகழும் 22 வயது கால் ஃபோர்னீர் எனும் பிரெஞ்ச் செஸ் விளையாட்டு வீரன், வெற்றியைத் திட்டமிட்டு தனது எதிரிகளோடு ஒரு வல்லமை மிக்க சக்தியாக விளங்குகிறான். உலகை மறந்துவிட்ட கால், ஃபோர்னீர், தனது காதலி லூ மற்றும் தனது உதவியாளர்கள் ஆரெலீன், ஆந்தொணி மற்றும் மாத்யூ இவர்களோடு அவன் விளையாட்டில் தன் நிலையான கவனத்தை செலுத்துகிறான். வாழ்க்கையில் இந்த விளையாட்டுக்கான முக்கியத்துவம் என்ன என்பதை மைக்கேலேஞ்சலோ பாசனிடி தனது சிறந்த நடிப்பின்மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

மாலை 7.00 மணி

Taxi | Dir.:Jafar Panahi Iran|2015|82’ WC-DCP

இயக்குநர் பனாஹி ஒரு டாக்ஸியை டெஹ்ரான் நகரத் தெருக்களைச் சுற்றிலும் ஓட்டிச் செல்கிறார். வேறுபட்ட பல்வேறு இடங்களிலிருந்து பல்வேறு விதமான பயணிகளை ஏற்றிச் செல்வதும் இறக்கிவிடுவதுமாக டாக்ஸி செல்கிறது. பயணிகளோடு அவர் பேசும் உரையாடல்கள் ஏற்கெனவே டாஷ்போர்டில் பொருத்தப்பட்டுள்ள கேமராவிலிருந்து பதிவாகிறது. ஆக தொழில்நுட்பரீதியாக பனாஹி அவர் யாரையும் இயக்கத் தேவையில்லை. எனினும் மறக்க முடியாத சில பயணிகளுடனான அவரது பயணத்தில் சின்னச் சின்ன வசனங்களைச் சேர்த்தும் கேமரா கோணங்களை மாற்றியும் எடுக்கப்பட்டுள்ள இப்படம் அவரது திறமையை மிகச் சிறப்பாக பறைசாற்றுகிறது.- உட்லண்ஸ் சிம்பொனி -

சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை உட்லண்ஸ் சிம்பொனி திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 11 மணி

Nanu Avanalla…….Avalu Dir.: B.S. Lingadevaru Kannada|2014|115’

நான் அவனில்லை.. அவள் திரைப்படம் வாழ்க்கையில் போராடும் ஒவ்வொருவருக்குமான படமாக விளங்குகிறது. முக்கியமாக இப்படம் புறக்கணிப்பையும் ஏமாற்றத்தையும் சந்தித்த மாற்றுப்பாலினத்தவரின் வாழ்வை மையப்படுத்தி பேசுகிறது. ஒருநாள் இரவு பெங்களூருவில் காவல்துறையினர் ரோந்து வரும்போது அவர்களை கைது செய்கிறார்கள். அவர்கள் அப்போது பாலியல் தொழிலுக்கான தங்கள் வாடிக்கையாளர்களுக்காக அவர்கள் காத்துக்கொண்டிருந்தனர். ஒரு அப்பாவி திருநங்கையான வித்யா தனது வீட்டுக்கு நடந்துசென்றுகொண்டிருந்தபோதுதான் போலீசாரால் பிடித்து காவல்நிலையத்துக்கு அழைத்துவரப்படுகிறாள். அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வித்யாவை விசாரிக்கிறார். ”நீ ஏன் இந்த வாழ்க்கைக்கு வந்தாய்” என கேட்கிறார். அதைத்தொடர்ந்து மடேஷா எனும் இளம்சிறுவனின் வாழ்க்கை நம் கண் முன் விரியத் தொடங்குகிறது.

மதியம் 2.30 மணி

பெரிய படம் என்பதால் 2.15 மணிக்கு இப்படம் தொடங்கிவிடும்

Dream Flight Dir.:Khan Lee Taiwan|2014|147’

விமானப்படைத் வீரர் லெப்டினென்ட் கர்னல் லீ செங் லியாங்கின் வாழ்க்கையில் நடந்த உண்மையான காதல் கதை. அவருக்கும் அவரது பார்வ்வைத்திறன் இல்லாத மனைவிக்குமான காதலை சொல்லும் படம்.

மாலை 5.00 மணி

Rajkahini Dir.: Srijit Mukherjee Bengali| 2015|160’

1947ல் பிரிட்டிஷ் அரசு வங்காளத்தை பிரிக்க சட்டம் இயற்றுகிறது. பிரிவினைக்கான உத்தரவுகள் கடுமையாக்கப்படுகின்றன. அப்போது எல்லைப் பகுதியில் உள்ள ஒரு பாலியல்தொழில் நடக்கும் வீட்டிலிருந்து 11 பெண்கள் தப்பித்து இரு நாடுகளுக்கிடையே ஓடுவார்கள். 1905ல் ஒருமுறையும் இந்திய விடுதலையின்போதும் வங்காளம் இரு முறை பிளவுபட்டது. நிர்வாகத்தை எளிமைப்படுத்துவதற்காக மக்கள் தொகையைக் காரணம்காட்டி இந்தப் பிரிவினை நடக்கிறது. உண்மையில் வங்க அரசியலின் வீரியத்தைக் குறைப்பதற்காகவே இது செய்யப்பட்டது. 1947ல் இந்திய சுதந்திர ஒப்பந்தத்தின் ஒருபிரிவான ரெட்கிளிப் கோடு வங்காளத்தை கிழித்தெறிகிறது. ஒரு பாலியல்தொழில் செய்யும் பெண்கள் பிரிவு வங்கப் பிரிவினையை ஏற்றுக்கொள்வதை எதிர்த்து போராடியதை இப்படம் பேசுகிறது.

மாலை 7.30 மணி

Bopem| Bopem Dir.:Zhanna Issabayeva Kazakhstan|2015|78’

டீனேஜ் சிறுவனான ரஸ்லான், ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறான். தன் தாயை இழந்திருந்த ரஸ்லான், வறண்ட ஆரல் நதியில் வாழ்கிறான். கடுமையான நோயின் காரணமாக 3 மாதத்துக்கு மேல் உயிர் பிழைக்க மாட்டோம் என்பதை உணரும் ரஸ்லான், தனது தாயின் மரணத்துக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க நினைக்கிறான்.

Comments

comments