சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை ஆர்கேவி திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி அரங்கம் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

hundred_2686937f

காலை 9.45 மணி

Martha |Martha Dir.:Rainer Werner Fassbinder Germany|1974|116’ R-RWF-DVD

முப்பதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் பெண் மார்த்தா, தன் தந்தையுடன் ரோமுக்குச் செல்கிறாள். எதிர்பாராத விதமாக, தந்தை மாரடைப்பால் அங்கேயே இறந்துபோக, தன்னை வெறுக்கும் தாயுடனே மார்த்தா இருக்கும்படி ஆகிறது. திருமணம் செய்துகொள்வதாகச் சொன்ன உயரதிகாரியின் விருப்பத்தை மறுத்து, நன்றியில்லாத, எப்போதும் இழிவுபடுத்தும் தாயுடன் வாழ்கிறாள் மார்த்தா. தன்னை அழகற்ற முதிர்கன்னியாகப் பார்க்கும் தாயிடம் இருந்து தப்பிக்க, தாயைப் போலவே குணம் கொண்ட, மரியாதையில்லாத மனிதனான ஹெல்முத்தை மணக்கச் சம்மதிக்கிறாள்.

ஹெல்முத், மார்த்தாவின் வேலையை விடச்சொல்லிக் கட்டாயப்படுத்துகிறான். அவளுடைய அம்மாவை மனநல மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, மார்த்தாவைப் பாலியல் வன்முறை செய்கிறான். குடும்ப வாழ்க்கையில் இதெல்லாம் இருக்குமென்றும் அவற்றை சகித்துக்கொள்ள வேண்டும் என்றும் நம்பிக்கொண்டிருந்த மார்த்தா, தனது நண்பன் கெய்சரைச் சந்திக்கிறாள். ஹெல்முத் ஒரு சாடிஸ்ட் என்று கெய்சர் கூறியதைக் கேட்ட மார்த்தா, அவர்கள் வசித்துக்கொண்டிருந்த வீட்டை விட்டு வெளியேறுகிறாள். மார்த்தாவும், கெய்சரும் ஒன்றாகக் காரில் பயணிக்கும்போது, அவளைக் கொல்ல அவளின் கணவன் பின்தொடர்வதை அறிகிறாள்.

காலை 11.45 மணி

The 100 year old man who climbed out of the window and disappeared Dir.:Felix Herngren Sweden|2013|114’

சர்வதேச அளவில் புகழ்பெற்ற, அதிகம் விற்பனையான நாவலின் திரை வடிவம். 100 வயதான ஒருவர் தன் வாழ்க்கையை அனுபவிக்க நினைக்கிறார். ஆலான் கார்ல்ஸன் தான் தங்கியிருக்கும் காப்பக்கத்திலிரும்து தப்பித்துச் செல்கிறார். ஆனால் இது அவரது முதல் சாகசம் அல்ல. நூறு வருடங்களில் அவர் பல சாகசங்களை நிகழ்த்தியுள்ளார்.

மதியம் 2.45 மணி

Diary of a Chambermaid | Journal d’une femme Dir.:Benoît Jacquot France |2015|96’ WC-DCP & Br

19ம் நூற்றாண்டில் நடைபெறும் கதை. பாரீஸ்ஸில் உள்ள ஒரு லேன்லெய்ரெ என்னும் செல்வந்தர் குடும்பத்திற்கு வீட்டுவேலை செய்ய வருகிறாள் கெலெஸ்டின். அவளது அழகே அவளுக்கு நிறைய குழப்பங்களை கொண்டுவந்து சேர்க்கிறது. அவரது தலைமைப் பணியாளரை அணுகுவதைக் கூட அவர் தவிர்த்துவிடுவாள். ஆனால் அந்த செல்வாக்வான வீட்டை தனது இரும்புக்கரம் கொண்டு வழிநடத்தும் மேடம் லேன்லெய்ரெவின் கட்டளையை ஏற்று நடப்பதுதான் அவளுக்கு முக்கியமானது. இந்நிலையில் அவள் ஜோசப் எனும் ஒரு மர்மமான தோட்டக்காரனை சந்திக்கிறாள். அவன் மீது அவளுக்கு ஈர்ப்பு உருவாகிறது.

மாலை 4.45 மணி

Pause Dir.:Mathieu Urfer Switzerland |2014|82’ WC-DCP & Br

சாமி எல்லோரிடமும் எளிதாகப் பழகும் ஒரு பாடலாசிரியர். அவனும், புத்திசாலி வழக்கறிஞரான ஜூலியாவும் நான்கு வருடங்களாக சேர்ந்து வாழ்கின்றனர். திடீரெனத் தற்காலிகமாக நமது உறவை முறித்துக் கொள்ளலாம் என்கிறாள் ஜுலியா. என்ன செய்வதென்றே புரியாமல், இசையமைப்பாளரான பழைய நண்பன் ஃபெர்னாண்டிடம் ஆலோசனை கேட்கிறான் சாமி. தன்னுடைய ஒரே துணை ஜூலியாதான் என்பதை நிரூபிக்கப் பல முயற்சிகளை எடுக்கிறான் சாமி.

மாலை 7.15 மணி

You’re Ugly Too Dir.:Mark Noonan Ireland|2015|78’ WC-DCP & Br

தனது தாயின் மறைவுக்குப் பின் தனது அங்கிள் வில்லுடன் சென்று தங்குகிறாள் ஸ்டேசி. இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளும் அதே நேரத்தில் அவர்களது மோசமான கடந்தகாலத்தை நினைவுகூரவேண்டும். மனிதர்களின் குணத்தைப் பற்றிய சரியான பிரதிபலிப்பான இந்தப் படம், நம்பிக்கையைப் பற்றியும், விட்டுக் கொடுத்து நகர்தல் பற்றியும் நகைச்சுவையுடன் பேசுகிறது.

Comments

comments