lakshmi-tweet-740x431

அம்மா வேடங்களில் நடிக்கும் சராசரியான ஒரு குணசித்திர நடிகையாக இருந்த லட்சுமி ராமகிருஷ்ணன்,

சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஆரம்பித்த பிறகு ஓரளவு பிரபலமானார்.

அதன் பிறகு தன்னை ஒரு பெண்ணியவாதியாக நினைத்துக்கொள்ளவும் தொடங்கினார்.

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைதான்…

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…. போலீஸைக் கூப்பிடுவேன்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அப்பாவி ஏழை எளிய மக்களை மிரட்டுவதற்காக லட்சுமி பயன்படுத்திய அந்த வார்த்தைகளை வைத்து லட்சுமியை இமிடேட் செய்து அது இது எது நிகழ்ச்சியில் காமெடி பண்ணினார்கள்.

யுடியூபில் பல லட்சம் மக்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்தனர்.

அதன் பிறகு என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா….என்ற வார்த்தை உலகம் முழுக்க பிரபலமானது.

அதையே பாடலின் பல்லவியாக வைத்து ரஜினி முருகன் படத்தில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது.

கடந்த வருடம் ரஜினி முருகன் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது.

‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ பாடல் மிகவும் பிரபலம் அடைந்தது.

ரஜினி முருகன் படம் பொங்கலுக்கு வெளியானதைத் தொடர்ந்து, ‘ரஜினி முருகன்’ படத்தின் புரமோஷனுக்காக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன்.

அந்த நிகழ்ச்சியில் ‘என்னம்மா’ பாடல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

“அப்பாடல் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்று கலாய்க்கப்பட்ட நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்டது” என்று பதிலளித்தார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனின் இந்த பதில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை செம கடுப்பாக்கிவிட்டது.

“என்னம்மா பாடல்’ கலாய்ப்பு நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்டது என்றும், உண்மையான வசனத்துக்கு சம்பந்தமில்லை என்றும் சிவகார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார்.

அப்படி என்றால் கலாய்ப்பு நிகழ்ச்சி ஒரு சிறந்த நிகழ்ச்சியா?

சிவகார்த்திகேயனின் நக்கல் (Spoof) எல்லை மீறி போய்விட்டது.

இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.

வணிகரீதிக்காக உபயோகப்படுத்தி விட்டு அதற்கு காரணம் என என்னைக் கலாய்த்தவர்களுக்கு கிரெடிட் தருவது என்பது எந்த விதத்தில் நியாயம்?

‘என்னம்மா’ பாடலுக்கு நான் தான் காரணம் என்று சொன்னால் நான் பணம் கேட்டு விடுவேனா?

கவலை வேண்டாம் சிவகார்த்திகேயன்.

இதை விட எனக்கு உருப்படியான நிறைய வேலைகள் இருக்கிறது”

என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக தெரிவித்திருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

வேறு வழியில்லை….

இந்த செய்திக்கு  இப்படித்தான் பன்ச்லைன் வைத்தாக வேண்டும்…

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா….

Comments

comments