001

பீப் பிரச்னை பலூனாக இருந்தபோது சென்னை வாசமிருந்த சிம்பு, பிரச்னை பாராசூட் சைஸ் ஆன பிறகு பெங்களூருவுக்குச் பறந்தார். அங்கே நகரத்துக்கு வெளியில் உள்ள  நண்பருக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் தஞ்சமாயிருந்தாராம் சிம்பு.

கோர்ட்டில் ஜாமீன் பெற்ற பிறகு இப்போது சென்னையில்தான் தங்கி இருக்கிறார். சினிமா தொடர்பே சற்றும் இல்லாத மூன்று நண்பர்கள்தான் இப்போதைக்கு சிம்புவின் உலகம். ராஜா, ராணி, ஜோக்கர் விளையாட்டு, லாப்-டப்பை திறந்து வைத்துக் கொண்டு கேம்ஸ், இடையில் அவ்வப்போது இணைய சர்ஃபிங் என பொழுதைக் கழிக்கிறார்.

சிம்பு, நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு சில காட்சிகள், ஒரு பாடல் மட்டும் பாக்கி. அந்தப் பட இயக்குநர் பாண்டிராஜ் பிற புராஜெக்ட்களில் பரபரப்பாகிவிட்டதால், ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளை சிம்புவே இயக்குவது என்று டி.ராஜேந்தர் முடிவெடுத்திருக்கிறாராம். இந்நிலையில் முன்பு இந்தி பிரச்சார தெருவில் வசித்தபோது சினிமாவில் இவ்வளவு பிரச்னைகளை சந்தித்தது இல்லை.

இப்போது தி.நகர் மாசிலாமணி தெருவில் 3-கிரவுண்டில் பங்களா கட்டிக் கொண்டு குடிபுகுந்த பிறகுதான்  ‘வாலு”பட பிரச்னை, பீப் பாட்டு பிரச்னை எல்லாம் வந்திருக்கிறது. அதனால் பழைய வீட்டுக்கே மறுபடியும் போய்விடலாம் என்று தினந்தோறும் கலக்கமான குரலில் சொல்லிக் கொண்டிருக்கிறாராம் உஷா ராஜேந்தர்.

மறுபக்கம் கெளதம் மேனன் இயக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. ‘சிம்பு நோ வொர்ரீஸ். நம்ம படம் வந்தபிறகு உன் ரேஞ்சே மாறப் போகுது’ என்று கெளதம் மேனன் சிம்புவிடம் நேரில் ஆறுதல் சொன்னாலும், மீதிப் படத்தை எப்படி முடிப்பது. படத்தை எப்படி பிசினஸ், ரிலீஸ் செய்வது என்ற சிந்தனையும் ஓடிக் கொண்டிருக்கிறது.

Comments

comments