001

சென்னை தி.நகரில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், நடிகர் சங்க கணக்குகளை சரத்குமாரும் ராதாரவியும் முறையாக ஒப்படைக்கவில்லை. புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று 3 மாதங்கள் ஆகியும் இன்னும் அவர்கள் கணக்கு வழக்குளை ஒப்படைக்க மறுக்கின்றனர். அவர்களுக்கு நாங்கள் அளித்திருந்த 3 மாத கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை அவர்கள் கணக்குகளை ஒப்படைக்காததால், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அவர் மீது புகார் அளிக்கப்பட உள்ளது. தற்போது ஆடிட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்ததும் முழுமையான, முறையான சட்ட நடவடிக்கைகள் துவக்கப்படும். அவர்கள் மீது போலீசில் புகார் அளிக்க செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என தெரிவித்தனர்.

எஸ்பிஐ சினிமாஸ்-நடிகர் சங்கம் இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்ய இன்று நடைபெற்ற நடிகர் சங்க அவசர செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2014-15ம் ஆண்டிற்கான வரவு, செலவை உடனடியாக ஒப்படைக்க வேண்டும், சரத்குமார் மற்றும் ராதாரவி மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசிடம் புகார் அளிப்பது என்பன உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்களும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Comments

comments