001

குட்டி மீனை கொன்று அதையே பெரிய மீனுக்கு இரையாக வைக்கிற தந்திரத்தை சினிமாவும் அரசியலும் சிறப்பாகவே செய்யும். அடுத்தவர் சுயநலத்தால் அபாயத்தை டச் பண்ணும் இத்தகைய மீன்களில் ஒருவராக நம்ம விஜய் சேதுபதியும் மாட்டிய கதைதான் இது.

கடந்த வருட ஹிட்டுகளில் முக்கியமான இடத்தில் இருக்கிறது ‘நானும் ரவுடிதான்’ படம். அந்த கூட்டணியை அப்படியே பெயர்த்துக் கொண்டு போனார் பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். பொதுவாகவே ஹிட்டான படங்களின் கூட்டணி மறுபடியும் ரிப்பீட் ஆகிறதென்றால் அதன் வியாபாரமே வேறு. அந்த கணக்கில் அமைந்ததுதான் இந்த கூட்டணி. ஆனால் விஜய் சேதுபதிக்கு சிவகார்த்திகேயன் ரூபத்தில் வந்தது ஆறடி உயரத்தில் ஒரு இரும்பு கேட். தனியொருவன் பட இயக்குனர் மோகன் ராஜா இயக்க, அதில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார் அல்லவா? அந்த படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசினாராம் சிவகார்த்திகேயன்.

மோகன் ராஜா படத்தில் மீண்டும் நடிக்க விரும்பாத நயன்தாரா, “அந்த படத்தில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை” என்று தெளிவாக சொல்லிவிட்டு, “என்னோட நடிக்கணும்னு உங்களுக்கு ஆசை இருக்கா?’ என்றாராம் சிவாவிடம். பின்னாலிருக்கிற திட்டம் தெரியாமல் “ஆமாம்” என்று சிவா தலையாட்டி வைக்க, அங்குதான் இந்த பொல்லாத ட்விஸ்ட் அரங்கேறியது. “விக்னேஷ்சிவன் டைரக்ஷனில் ஏ.எம்.ரத்னம் ஒரு படம் தயாரிக்கிறார். அதில் விஜய் சேதுபதிதான் என்னோட நடிக்கறதா பேச்சு இருக்கு. நீங்க ஓ.கேன்னா நானும் விஜய் சேதுபதியும் வேறு படத்தில் இணைஞ்சுக்குறோம். இந்த படத்தில் நீங்க உள்ள வரலாம்” என்றாராம் நயன்தாரா.

அப்புறமென்ன? நைசாக ஓரம் கட்டப்பட்டிருக்கிறார் விஜய்சேதுபதி. ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்க, சிவகார்த்திகேயன் நயன்தாரா ஜாயின்ட் அடிக்கப் போகிறார்கள். இதில் ஓரமாய் நின்ற கொக்குக்குதான் கொள்ளை லாபம். இன்றைய தேதிப்படி விஜய் சேதுபதியை விட, சிவகார்த்திகேயனின் செல்வாக்குதான் உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது. வியாபாரத்தில் மேலும் மேலும் லாபம்! அஜீத்திடமிருந்து விலகி வந்தாலும், அதற்கு கொஞ்சமும் சளைக்காத வேறொரு படத்துடன் கம்பீரமாக களத்தில் நிற்கப் போகிறார் ஏ.எம்.ரத்னம்

எல்லாப் புகழும் நயன்தாராவுக்கே!

Comments

comments