2

‘கபாலி’ மற்றும் ‘2.0’ படத்தில் மாறி மாறி நடித்து வருகிறார் ரஜினி. இதில் ‘கபாலி’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்புக்காக விரைவில் மலேசியா செல்லவிருக்கிறார்கள்.

ரஞ்சித் இயக்கத்தில் ‘கபாலி’ மற்றும் ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ என ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருகிறார் ரஜினி. இதில் ‘கபாலி’ படத்தை தாணுவும், ‘2.0’ படத்தை லைக்கா நிறுவனமும் தயாரித்து வருகிறது.

‘2.0’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. ‘கபாலி’ படத்தின் சென்னை காட்சிகளை படமாக்கிவிட்டு, ரஜினி அல்லாத காட்சிகளை மலேசியாவில் படமாக்கி வருகிறார்கள்.

‘2.0’ படத்தின் சென்னை படப்பிடிப்பை முடித்துவிட்டு, அமெரிக்கா செல்லவிருக்கிறார் ரஜினி. அங்கிருந்து பிப்ரவரி 1ம் தேதி மலேசியா திரும்பும் ரஜினி, ‘கபாலி’ இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.

முதலில் ரஜினி தாடியுடன் இருக்கும் காட்சிகளை படமாக்கிய படக்குழு, தற்போது தாடியில்லாமல் நடிக்கும் காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள். அப்படப்பிடிப்பை முடித்துவிட்டு மீண்டும் சென்னையில் தொடங்கும் ‘2.0’ படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறார் ரஜினி.

‘கபாலி’ இறுதிகட்டப் பணிகளை முடித்தவுடன், ‘2.0’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் ரஜினி. விரைவில் அக்‌ஷய்குமார் மற்றும் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார் ஷங்கர்.

இதனிடையே பொலிவியாவில் ‘2.0’ முக்கிய காட்சிகளை காட்சிப்படுத்த அனுமதி கோரியிருக்கிறது படக்குழு. அனுமதி கிடைத்தவுடன் அதற்கு தகுந்தாற் போல் படப்பிடிப்பு காட்சிகளை மாற்றியமைக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

‘கபாலி’ படத்தை மே மாதத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. ‘2.0’ படப்பிடிப்பு முடிவு பெறுவதைப் பொறுத்தே வெளியீட்டு திட்டம் இருக்கும் என்கிறார்கள்.

Comments

comments