2

ரஜினிக்கு வில்லன்களாக தைவான் நடிகர் வின்ஸ்டன் சாவ் மற்றும் மலேசிய நடிகர் ரோஷ்யம் நோர் ஆகியோர் ‘கபாலி’ படத்தில் நடித்து வருகிறார்கள்.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கபாலி’. சென்னையில் தொடங்கிய முதற்கட்ட படப்பிடிப்பைத் தொடர்ந்து மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெற்றது.

நீண்ட நாட்கள் மலேசியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு, அதனைத் தொடர்ந்து பாங்காக்கில் நடைபெற்றது. அதன் பின்னர் சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் துவங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது.

‘கபாலி’ கதையமைப்பின்படி வெளிநாட்டு வில்லன் ஒருவர் முக்கிய வேடத்தில் நடிக்க வேண்டும். அந்த வேடத்துக்கு பொருத்தமான ஆள் யார் என்று தீவிரமாக தேடி வந்தது படக்குழு.

ரஜினிக்கு வில்லனாக ஜெட்லீ ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியாயின. இதனை மேற்கோள் காட்டி ட்விட்டர் தளத்தில் இயக்குநர் ரஞ்சித்திடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு “மன்னிக்கவும். இச்செய்தியில் உண்மையில் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.

ரஜினிக்கு வில்லன்களாக தைவான் நடிகர் வின்ஸ்டன் சாவ் மற்றும் மலேசிய நடிகர் ரோஷ்யம் நோர் ஆகியோர் ‘கபாலி’ படத்தில் நடித்து வருகிறார்கள். ரஜினியுடன் வில்லன்கள் மோதும் காட்சிகளை தற்போது சென்னையில் காட்சிப்படுத்தி வருகிறார் இயக்குநர் ரஞ்சித்

Comments

comments