01 (85)

அடிப்படையில் பைக் ரேசரான அஜித் நடிகராவதற்கு முன் பல பந்தயங்களில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக இன்னமும் மாத்திரைகள் உட்கொண்டு வருகிறார். அவர் சாப்பிடுகிற மாத்திரையின் காரணமாக அவர் உடம் வெயிட் போட்டது. இந்த தகவலை அஜித்தே ஒருமுறை சொன்னார். அதன் பிறகும் சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது பல தடவை அடிபட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார். வேதாளம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருந்தபோதும் ஏற்கனவே அடிபட்ட இடத்திலேயே மீண்டும் அஜித்துக்கு அடிபட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.

தற்போது அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டிலேயே ஒய்வு எடுத்து வருகிறார் அஜித். சுமார் 6 மாதங்கள் கட்டாயம் ஒய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அட்வைஸ் செய்துள்ளனர். அதன்படி ஓய்வில் இருக்கும் , அஜித் மீண்டும் ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பில் பங்கேற்கிறார். வேதாளம் படத்தை இயக்கிய சிவாவே அஜித் நடிக்க உள்ள புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

இந்நிலையில், அஜித் ஒரே நேரத்தில் 2 படங்களில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது. சிவா இயக்கும் படம் தவிர இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சிவா இயக்க உள்ள படத்தை தீபாவளிக்கும், விஷ்ணுவர்தன் இயக்கும் அடுத்த வருட படத்தை பொங்கலுக்கும் வெளியிட வேண்டும் என்று அஜித் சொல்லி இருப்பதாகவும் தகவல். அஜித்துக்கு நெருக்கமான வட்டாரமோ ஒரே நேரத்தில் இரண்டு படம் என்ற தகவலை வதந்தி என்கிறது.

 

Comments

comments