001

பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ஏதாவதொரு பெரியபடம் மட்டுமே வெளியாகும் வழக்கம் அண்மைக்காலமாக உடைபட்டுக்கொண்டிருக்கிறது. வருகிற பொங்கலன்று பாலாவின் தாரைதப்பட்டை, விஷால் நடிக்கும் கதகளி, உதயநிதி நடிக்கும் கெத்து, சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினிமுருகன் ஆகிய நான்குபடங்கள் வெளியாகவிருக்கின்றன.

இதற்கடுத்து ஏப்ரல் மாதத்தில் வருகிற தமிழ்ப்புத்தாண்டு எனப்படுகிற சித்திரைமுதல்நாளிலும் மூன்று பெரியபடங்கள் வரவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 24 படம் பொங்கலில் வெளியாகும் என்று முதலில் சொல்லப்பட்டது- ஆனால் படத்தின் வேலைகள் நிறைவடையாது என்பதால் ஏப்ரலுக்குத் தள்ளிவைப்பதாகச் சொல்லப்பட்டுவிட்டது.

அதன்பின்னர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தெறி படம் ஏப்ரலில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. இப்போது கௌதம்மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிம்பு நடித்திருக்கும் அச்சம்என்பதுமடமையடா படமும் ஏப்ரலில் வெனியாகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இம்மூன்று படங்களுமே ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுகிற படங்கள். இம்மூன்றும் ஒரேநாளில் வெளியானால் கடும்போட்டி இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

Comments

comments