Iruthi-Suttru-stills-013-740x431

வேட்டை படத்துக்குப் பிறகு தமிழ்ப்படங்களில் நடிக்காமல் கடந்த சில வருடங்களாகவே பாலிவுட்டிலேயே செட்டிலாகி இருந்தார் மாதவன்.

நீண்டஇடைவெளிக்குப் பிறகு ‘இறுதிச்சுற்று’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

‘துரோகி’ படத்தை இயக்கிய சுதா கே. பிரசாத் இயக்கி உள்ள இப்படத்தில் மாதவன் பாக்ஸராக நடித்திருக்கிறார்.

இதற்காக உடம்பை மெருகேற்றி, நீண்ட தலைமுடி, தாடி வளர்த்து வித்தியாசமான கெட்-அப்பில் நடித்துள்ளார் மாதவன்.

இப்படத்தில் கதையின் நாயகியாக நடிகை ரித்திகா சிங் நடித்திருக்கிறார். இவர் உண்மையிலேயே பாக்ஸராம்.

இறுதிச்சுற்று படத்தை ‘ஒய்நாட் ஸ்டுடியோஸ்’ நிறுவனமும் ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படம் ‘சால காதூஸ்’ என்ற பெயரில் ஹிந்தியிலும் தயாராகி இருக்கிறது.

இரண்டு மொழிப்படமாக எடுக்கப்பட்டாலும் இப்படத்தின் படப்பிடிப்பை 44 நாட்களில் முடித்துள்ளார் இயக்குநர் சுதா.

இறுதிச்சுற்று படத்தை யுடிவி நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது.

ஜெயம் ரவி பாக்சராக நடித்த பூலோகம் அண்மையில் வெளியாகி வெற்றியடைந்தது.

அதே பாணியில் பாக்ஸிங் விளையாட்டை மையமாக வைத்த எடுக்கப்பட்ட இறுதிச்சுற்று படமும் வெற்றியடைய வாய்ப்புள்ளது.

ஜனவரி 29 அன்று இறுதிச்சுற்று படத்தை வெளியிட உள்ளனர்.

Comments

comments