02-1446440831-ajith-anirudh-vedalam

தலைப்பைப் படித்துவிட்டு இளையராஜா என்னவோ சன் டி.வி., விஜய் டி.வி.போல் சேனல் ஆரம்பித்துவிட்டார் என்று நினைத்துவிட வேண்டாம்.

பீப் ஸாங் புகர் சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தர் குறல் டி.வி என்ற பெயரில் ஒரு இணையதளம் நடத்தி வருகிறார்.

பெயர்தான் டி.வி.யே தவிர, அது இணையதளம்தான்.

அப்படியொரு இணையதளம்தான் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கியுள்ள இந்த இளையராஜா டிவி என்கிற இணையதளமும்..

தன்னுடைய இசையை வைத்து எவன் எவனோ கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக இளையராஜாவுக்கு நீண்டகாலமாகவே ஒரு எண்ணம் உண்டு.

நம் இசையை வைத்து எவனோ சம்பாதிப்பதற்கு பதில் நாமே சம்பாதித்தால் என்ன? என்று இளையராஜாவுக்கு தோன்றியிருக்க வேண்டும்.

அந்த எண்ணத்தின் அடுத்தகட்ட முயற்சியே இந்த இளையராஜா டிவி.

டி.வி. மட்டுமல்ல இணையத்திலேயே எப்.எம்.ரேடியோவும் தொடங்கி இருக்கிறார்.

யார் கொடுத்த ஐடியாவோ தெரியவில்லை….

பொங்கல் பண்டிகை முதல் இணையத்தில் தன்னுடைய அதிகாரபூர்வ ரேடியோ, தொலைக்காட்சி மற்றும் தான் இசையமைத்த சினிமாப் பாடல்களை வாங்க அதிகாரப்பூர்வ இணையதளம் தொடங்கினார் இளையராஜா.

இந்த தகவல் தெரிந்ததும்அவரது ரசிகர்கள் இளையராஜா டி.வி.யை க்ளிக் பண்ணினார்கள்.

அய்யோ… பாவம்… ஏமாந்துபோயிருப்பார்கள்.

பயன்பாட்டாளர்களின் வருகையால் அதாவது பேன்ட்வித்தின் அளவு அதிகமானதால் இளையராஜா டி.வி. என்கிற இணையதளம் செயல்படாமல் முடங்கிப் போனது.

இணையத்தை வைத்து சம்பாதிக்க நினைப்பது தப்பில்லை, அதற்கு ஏற்றவாறு பணம் செலவு செய்து நவீனவசதிகளை செய்ய வேண்டும்.

இதை இளையராஜாவுக்கு சொல்வது யார்?

சொன்னால்…. அறிவிருக்கா என்று கேட்பார்…. அல்லது என்னிடம் இதை சொல்ல எனக்கு தகுதி இருக்கா என்று கேட்கவும் வாய்ப்பிருக்கிறது.

அதனால் சம்மந்தப்பட்டவர்கள் வாயை மூடிக்கொண்டுவிட்டார்களோ என்னவோ….

Comments

comments