01 (85)

ஜனவரி 29, வரும் வெள்ளி அன்று வெளியாகவிருக்கும் படங்களில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மாதவன் நடிப்பில் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக இருக்கும் படம் “இறுதிச்சுற்று”, ஹிந்தியில் “சால காதூஸ்”.

இப்படத்தின் டிரெய்லர்கள் மற்றும் பாடல்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ள நிலையில், இப்படத்தினை தெலுங்கிலும் எடுக்க உள்ளதாக இப்படத்தின் இயக்குநர் சுதா கோங்கரா பிரசாத் கூறியுள்ளார். தெலுங்கின் முன்னணி நடிகர் ஒருவர் இப்படத்தை சமீபத்தில் பார்த்துவிட்டு, இப்படத்தில் தான் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதகவும், இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யப் போவதில் தனக்கு மகிழ்ச்சி என்றும், ஆனால் இதற்கு மேல் வேறு எதுவும் தற்சமயம் கூற இயலாது எனவும் இயக்குநர் சுதா கூறியுள்ளார்.

சுதா அந்த நடிகரின் பெயரைக் கூறாத போதிலும், தெலுங்கின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான வெங்கடேஷ் தான் அந்த நடிகர் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் சால காதூஸ் படத்தைப் பார்த்த வெங்கடேஷ், இப்படத்தை தானே தயாரித்து, நடிப்பதில் ஆர்வமாக உள்ளதாக வெங்கடேஷின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் தனது சொந்தப் படம் போல் பாவித்து தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் முயற்சி செய்து புரமோட் செய்து வரும் மாதவன் இதற்குச் சம்மதிப்பாரா என்பது தான் நமது கேள்வி.

ஏனெனில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநரின் இந்தக் கதையை வைத்துக்கொண்டு பல தயாரிப்பு கம்பெனிகளில் ஏறி இறங்கியதாகக் கூறியுள்ள நிலையில் தெலுங்கில் மட்டும் வேறு ஒரு நடிகர் நடிப்பதற்கு ஒப்புக்கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Comments

comments