idhu_namma_aalu_2340075f

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்திருக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் அனைத்து உரிமைகளும் சேர்த்து சுமார் 60 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியிருக்கிறது

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க உருவாகி இருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. குறளரசன் இசையமைத்து வரும் இப்படத்தை டி.ராஜேந்தர் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் தயாரித்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் படத்தை வெளியிடுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

‘இது நம்ம ஆளு’ படத்தின் வியாபாரம் தொடங்கியது. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமை, திரையரங்க வெளியீட்டு உரிமை, இசை உரிமை என கடும் போட்டி நிலவி வருகிறது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமை கைப்பற்றி இருக்கிறது.

இசை உரிமையை டி-சீரியஸ் நிறுவனம் 1.10 கோடி, திரையரங்க உரிமை – 28.9 கோடி, வெளிநாட்டு உரிமை – 12 கோடி, தொலைக்காட்சி உரிமை – 15.8 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பீப் பாடல் சர்ச்சையில் சிக்கி இருப்பதைத் தொடர்ந்து, இப்படம் வெளியாக இருப்பதால் நல்ல வசூல் இருக்கும் என்ற நினைப்பில் இந்தளவுக்கு வியாபாரம் ஆகியிருப்பதாக சிம்புவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments

comments