மலையாளத்தில் ஹிட் அடித்த படங்களை தமிழில் ரீமேக் செய்தால் நிச்சயம் வெற்றி என்ற சக்ஸஸ் பாணியை கையில் எடுத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். “36வயதினிலே”,“பாபநாசம்” பட வரிசையில் அடுத்ததாக மொழிமாற்றம் செய்து வெளியாகவிருக்கும் படமே “பெங்களூர் நாட்கள்”.

மலையாளத்தில் வசூல் சாதனை புரிந்த படம்  “பெங்களூர் டேஸ்”. துல்கர் சல்மான், நஸ்ரியா, நிவின்பாலி, பகத்ஃபாசில், பார்வதி உள்ளிட்ட நட்சத்திர பட்டாள நடிப்பில் வெளியான படத்தின் தமிழ் மொழிமாற்றத்தில் ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா, ராணா, பார்வதி ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கான இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.  தமிழிலும் இசை கோபிசுந்தர் தான்.

DCIM-(63)

ஹைலைட்ஸ்!

முன்னதாக தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழியிலும் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யலாம் என்று முடிவெடுத்தே படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறது பிவிபி சினிமாஸ். இறுதியில் பொம்மரில்லு பாஸ்கர் இயக்கத்தில் தமிழில் மட்டும் உருவாக்கியிருக்கின்றனர். நஸ்ரியா பாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீதிவ்யா முதன் முறையாக சொந்தக்குரலில் டப்பிங் பேசி நடித்திருக்கிறார்.  பெங்களூர் டேஸ் படத்தில் முக்கிய இரு குணச்சித்திர கதாபாத்திரங்களான ஊர்வசி சகோதரியான கல்பனா கேரக்டரில் சரண்யாவும், பிரதாப் போத்தன் கேரக்டரில் பிரகாஷ் ராஜூம் தமிழில் நடித்திருப்பது ஸ்பெஷல்.

இரண்டு பாடல்களை இப்படத்திற்காக மதன் கார்க்கி எழுதியிருகிறார். ஆனால் இசை வெளியீட்டு விழாவின் போது தான் இயக்குநர் பாஸ்கரை முதன்முறையாகச் சந்தித்திருக்கிறார், அதுமட்டுமல்லாமல் இசையமைப்பாளர் கோபிசுந்தருடன் மூன்று படங்கள் வேலை பார்த்துவிட்டாலும் இன்றும் அவரை சந்தித்ததில்லை என்று மதன்கார்க்கி கூறியதுமே அரங்கம் கலகலத்தது.

bagna

தொடர்ந்து பட்டிமன்றம் ராஜா, சரண்யா, ரேகா, பாபிசிம்ஹா, ராணா மற்றும் ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் பேசினர்.  ஒவ்வொருவரும் பேசும் போது ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் தெறி மாஸ்.

ஆர்யா பேசும்போது, “ ஸ்ரீதிவ்யா தமிழில் இவ்வளவு நேரம் பேசியதே எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சியே இசைவெளியீடு தான். ஆனால் ஸ்ரீதிவ்யா பேசுறதுக்கு முன்னாடி போஸ்டர்ல இருக்கே,  யாரு  அந்த கோபிசுந்தர்னு என்கிட்ட  கேட்டாங்க” என்று ஸ்ரீதிவ்யாவை மேடையில் மாட்டிவிட அரங்கம் அதிர்ந்தது. ஸ்ரீதிவ்யா முகத்திலோ செல்லக் கோபம்.

இறுதியில் பெங்களூர் நாட்கள் படத்திற்கான இசை வெளியீடும் டிரெய்லர் வெளியீட்டுடன் நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது. மலையாளத்தில் நாம் கேட்ட இசையிலே தமிழ் வரிகளில் பாடல் உருவாகியிருப்பது இன்னும் எதிர்பார்ப்பைத் தூண்டும் என்கிறார்கள் படக்குழுவினர்.

DCIM-(75)

மிஸ்ஸிங்:

பெங்களூர் நாட்கள் படத்தின் மற்ற முக்கிய நாயகிகளான பார்வதி மற்றும் சமந்தா, இசையமைப்பாளர் கோபி சுந்தர் இந்த மூவரும் இவ்விழாவில் மிஸ்ஸிங்.

Comments

comments