2

சில நடிகர்கள் எதிர்காலத்தில் தங்களுக்கு அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இருப்பதை வெளிப்படையாக அறிவித்தபோதும், அஜித் உள்ளிட்ட சில நடிகர்கள் அதை வெளிப்படையாக சொல்லிக்கொள்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் அரசியலைவிட்டு ரொம்ப தூரமாக தள்ளியே இருந்து வருகிறார்கள். அஜித்தைப் பொறுத்தவரை தனது ரசிகர் மன்றத்திற்குள் அரசியல் வருகிறது என்பது தெரிந்ததுமே மன்றங்களையே கலைத்து விட்டார். மேலும் தான் நடிக்கும் படங்களின் விழாக்களில்கூட அவர் கலந்து கொள்வதில்லை.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பிஜேபி கட்சியில் அஜித் இணையப்போவதாக இரு தினங்களாக இணையதளங்களில் பரபரப்பு செய்தி வெளியானது. இந்த செய்தி அஜித்தரப்பின் கவனத்துக்கு சென்றதை அடுத்து, அவர்கள் மறுத்துள்ளனர். அதில், அஜித்துக்கு அரசியல் கட்சிகள் அழைப்பு விடுப்பது உண்மைதான். என்றாலும் அவர் அது சம்பந்தமாக எந்த அரசியல் தலைவர்களையும் சந்தித்ததில்லை, சந்திக்கப்போவதுமில்லை. அவரது கவனமெல்லாம் நடிப்பின் மீது மட்டுமே உள்ளது என அஜித் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

 

Comments

comments