01 (85)

கலைப்புலி தாணுவின் தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கபாலி’.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மலேசியா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.

இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மலேசியாவில் விரைவில் துவங்க இருக்கிறது.

பிப்ரவரி 28ம் தேதி ‘கபாலி’ படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும் என்று தயாரிப்பாளர் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் சூழலில் அதற்கு முன்னதாக ‘கபாலி’ படத்தை வெளியிட முடியுமா என்று யோசித்தனராம்.

அதற்கான சாத்தியம் குறைவு என்பதால் தேர்தலுக்குப் பிறகு அதாவது மே கடைசி வாரத்தில் கபாலி படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் அடிபடுகிறது.

குறிப்பாக, ‘கபாலி’ படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமை தொடர்பான வியாபாரத்தை முடிப்பதில் தாணு மும்முரமாக உள்ளார்.

அமெரிக்க விநியோக உரிமையை சினி கேலக்ஸி நிறுவனம் 8.5 கோடிக்கு வாங்கியிருக்கிறதாம்.

தமிழ் சினிமாவைப் பொறுத்துவரை மிக அதிக விலை இது.

ஸ்ரீராம் எனும் விநியோகஸ்தர் ஆஸ்திரேலிய நாட்டுக்கான விநியோக உரிமையை 1.65 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறாராம்.

இது மட்டுமல்ல, மலேசியாவில் ‘கபாலி’ படத்திற்கு இதுவரை எந்த இந்திய படத்திற்கும் கொடுக்கப்படாத விலை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

‘கபாலி’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டிருப்பதே காரணம்.

அது மட்டுமின்றி, மலேசியாவில் ரஜினிக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதன் காரணமாகவும் இவ்வளவு பெரியவிலைக்கு கபாலி விற்கப்பட்டிருக்கிறது.

மாலிக்ஸ் ட்ரீம்ஸ் கார்பொரேஷன் என்ற நிறுவனம் கபாலி படத்தின் மலேசியா நாட்டுக்கான விநியோக உரிமையை வாங்கியுள்ளதாம்.

இன்னும் சில தினங்களில் ஜப்பான் நாட்டுக்கான வியாபாரமும் முடிய வாய்ப்பிருக்கிறதாம்.

Comments

comments