02-1446440831-ajith-anirudh-vedalam

லிங்கா படம் வரை ரஜினி நடித்த படங்கள் மைசூரில் படமாக்கப்படுவது ஒரு செண்டிமென்டாக இருந்து வந்தது. ஆனால் அப்படம் கொடுத்த அதிர்ச்சி தோல்வி காரணமாக அந்த செண்டிமென்டில் இருந்து வெளியேறி விட்டார் ரஜினி. அதன்காரணமாக அவரது கபாலி படம் சென்னையில் தொடங்கிய பின்னர் மலேசியாவில் நடந்தது. இப்போது மறுபடியும் சென்னையில் நடிக்கும் நிலையில், பிப்ரவரி மாதம் மீண்டும் மலேசியாவில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடக்கிறது. அதோடு, கபாலிக்கு பூசணிக்காய் உடைத்து திருஷ்டி சுற்றி போடுகிறார் டைரக்டர் ரஞ்சித்.

பின்னர், முழுவீச்சில் 2.ஓ படத்தில் நடிக்கப்போகிறார் ரஜினி. ஏற்கனவே அப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினி, கபாலிக்காக சற்று இடைவெளி கொடுத்தவர், பிப்ரவரியில் கபாலியை முடித்துக்கொடுத்த பிறகு அமெரிக்கா செல்கிறாராம். அங்குள்ள அதிநவீன அனிமேஷன் ஸ்டுடியோக்களில் 2.ஓ படப்பிடிப்பு நடைபெறவிருப்பதால் மாதக்கணக்கில் அமெரிக்காவில் முகாமிட்டு நடிக்கிறாராம் ரஜினி. அவரைப்போலவே அப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கும் அக்சய்குமார், எமிஜாக்சன் போன்றவர்களும் அதே ஸ்பாட்டில் மாதக்கணக்கில் முகாமிடுகிறார்களாம்.

Comments

comments