NTLRG_160106115708000000

அதர்வா நடிப்பில் வேகமாக உருவாகி வரும் படம் ‘கணிதன்’. கேத்ரின் தெரஸா ஹீரோயின். டி.என்.சந்தோஷ் இயக்குகிறார், சிவமணி இசை அமைக்கிறார் அரவிந்த் கிருஷண்ணா ஒளிப்பதிவு செய்கிறார். வி.கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்தில் அதர்வாவுக்கும், ஒரு மெகா வில்லனுக்கும் இடையிலான மோதல் ஆக்ஷன் கதை.

சண்டையால் மோதுவதை விட புத்தியால் மோதுகிற காட்சிகள்தான் அதிகமாம்.

ஹீரோவுக்கு நிகரான அந்த வில்லன் கேரக்டரில் இந்தி நடிகர் தருண் அரோரா நடிக்கிறார். இவர் இந்தியில் ஹவாஸ், ஷான், 19 ரெவில்யூசன், ஜப் வி மெட், லவ் குரு உள்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

“பாலிவுட், ஹாலிவுட்டில் கூட ரீமேக் பண்ணக்கூடிய அளவிற்கு சக்தி வாய்ந்த கதை. அதனால்தான் இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஒரு அறிவாளியும், ஒரு பேரறிவாளியும் மோதிக் கொள்கிற திரைக்கதை. தமிழ் படத்தில் நடிப்பேன் என்று நான் கனவில்கூட நினைத்து பார்க்கவில்லை, அது நடந்திருக்கிறது. கணிதன் படத்திற்கு பிறகு நிறைய தமிழ் வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறேன். நான் சென்னையில் சில வருடங்கள் படித்தேன். அதனால் எனக்கு தமிழ் கொஞ்சம் பேசத் தெரியும்” என்கிறார் தருன் அரோரா.

 

Comments

comments