NTLRG_151215144304000000

2015ம் வருடத்தின் கடைசி மாதமான இந்த மாதத்தில் இன்னும் இரண்டு வெள்ளிக் கிழமைகளே உள்ளன. இந்த வாரம் 18ம் தேதி வெள்ளிக்கிழமையன்று தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள ‘தங்க மகன்’ படம் வெளியாகிறது. அந்தப் படத்தோடு ‘கொக்கிரகுளம்’ என்று சிறிய படம் ஒன்று மட்டுமே வெளியாகிறது. சென்னை உட்பட பெரு நகரங்களில் உள்ள தியேட்டர்களில் அதிகமான படங்கள் இல்லாத ஒரு சூழ்நிலையே உருவாகி உள்ளது. கடந்த வாரம் வெளியான ‘ஈட்டி’, அதற்கு முன் வெளிவந்த ‘உறுமீன், உப்பு கருவாடு, 144′ ஆகிய படங்களுடன் தீபாவளிக்கு வெளிவந்த ‘வேதாளம், தூங்காவனம்’ ஆகியவையும் குறைந்த தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த 18ம் தேதி இரண்டு பெரிய ஹிந்திப் படங்களான ஷாரூக் கான், கஜோல் நடித்துள்ள ‘தில்வாலே’ மற்றும் ரன்வீர் சிங்க, தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ‘பாஜிராஸ் மஸ்தானி’ ஆகிய படங்கள் வெளியாகின்றன. இந்த இரண்டு ஹிந்திப் படங்களும் சென்னையில் மட்டும் தலா 15 திரையரங்குகளில் வெளியாகின்றன. ‘பாஜிராவ் மஸ்தானி’ படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். தமிழில் அதிக படங்கள் இந்த வாரம் வெளியாகாததால் இந்த இரண்டு ஹிந்திப் படங்கள் சென்னை திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளன.

டிசம்பர் 25ம் தேதிதான் இந்த ஆண்டின் கடைசி வெள்ளிக் கிழமை. அன்றைய தினம் கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் ஒரு நாள் முன்னதாகவே தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. முதலில் ‘பசங்க 2′ மட்டும் அன்று வெளியாவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தப் போட்டியில் ‘அஞ்சல, வில் அம்பு, பூலோகம்’ ஆகிய படங்களும் இணைந்துள்ளன. டிசம்பர் 25ம் தேதியன்று 4ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்’ படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரப் போட்டியில் மேலும் சில படங்கள் இணையவும் வாய்ப்புள்ளது.

 

Comments

comments