rajinirockey_2675092f

‘2.0’ படப்பிடிப்பு தளத்தில் ரஜினியுடன் வடிவமைப்பாளர் ராக்கி

ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ படத்தில் ரஜினியின் லுக்கை வடிவமைத்திருக்கிறார் பாலிவுட் வடிவமைப்பாளர் ராக்கி.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்‌ஷய்குமார் முக்கிய வேடத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். ஏமி ஜாக்சன் மற்றும் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும், ரோபோக்களை வைத்து படமாக்க இருக்கும் காட்சிகள் எப்படி வரவேண்டும் என்பதற்கான பணிகளை மேற்கொள்ள இருக்கிறார் ஷங்கர்.

‘2.0’ படத்தில் ரஜினியின் லுக்கை வடிவமைத்திருக்கிறார் பாலிவுட்டின் பிரபல வடிவமைப்பாளரான ராக்கி. இவர் சல்மான் கான், ரித்திக் ரோஷன் மற்றும் கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்த படங்களுக்கு வடிவமைப்பாளராக பணியாற்றி இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘’ரோபோ2’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சூப்பர் ஸ்டாரின் லுக்கை வடிவமைத்து வருகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார் ராக்கி.

Comments

comments