1

மூன்று மாறுபட்ட கெட்டப்புகளில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தெறி. இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஜய், சமூக விரோதிகளை களையெடுக்கும் ஆக்சன் காட்சிகளை சமீபத்தில் கோவாவில் படமாக்கினார். அதற்காக ஒரு ஹாலிவுட் பைட் மாஸ்டரையும் வரவழைத்து இதுவரை விஜய் படங்களில் இல்லாத அளவுக்கு அதிரடியாக படமாக்கியுள்ளாராம். அந்த வகையில், ஒரு சண்டை காட்சியை மட்டும் ஒரு வாரத்திற்கும் மேலாக, கிட்டத்தட்ட 8-க்கும் மேற்பட்ட கேமராக்களை வைத்து படமாக்கியிருக்கிறார்களாம்.

இந்த நிலையில், வருகிற 10-ந்தேதி தெறி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. அந்த காட்சியில் விஜய் மற்றும் வில்லனாக நடிக்கும் டைரக்டர் மகேந்திரன், அவரது அடியாட்களும் நடிக்கிறார்களாம். அந்த காட்சிக்காக சென்னையிலுள்ள பின்னி மில்லில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருக்கிறதாம். அதோடு, அந்த சண்டை காட்சியில் விஜய்யுடன் மோதுவதற்காக ஹாலிவுட் ஸ்டன்ட் நடிகர்களும் வரவழைக்கப்படுகிறார்களாம். விஜய் ஒரு அடி விட்டால் மூன்று சுற்று சுற்றி பறந்து சென்று விழக்கூடிய அளவுக்கு திறமையான ஸ்டன்ட் நடிகர்களாம். அவர்கள் படப்பிடிப்பு நடைபெறுவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பே சென்னை வந்திருந்து ரிகர்சலை தொடங்குகிறார்களாம். இந்த க்ளைமாக்ஸ் பைட் சீன் படமானால் தெறி படத்தின் பெருவாரியான காட்சிகள் படமாக்கப்பட்டுவிடும் என்கிறார்கள்.

Comments

comments