வேலன்டினாவாக மாறிய பெனலோப்!
நைட் அட் த மியூசியம் படத்தின் மூலம் உலக ரசிகர்களை ஈர்த்தவர் பென் ஸ்டில்லர். அவர் நடித்து இயக்கி 2001ல் வந்த ஜூலேண்டர் படமும் கிட்டத்தட்ட நைட் அட் த மியூசியம் போன்ற பேன்டசி காமெடி படம் தான். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜூலேண்டரின் அடுத்த பாகத்தை இயக்கி நடிக்கும் எண்ணம் கொண்டார் பென் ஸ்டில்லர்.
தற்போது படத்தின் மொத்த வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவர் 12ம் தேதி படத்தை உலகம் முழுவதும் திரையிட முடிவு செய்துள்ளார்.
படத்தில் வரும் வேலன்டினா என்ற கேரக்டரில் பிரபல ஹாலிவுட் நாயகி பெனலோப் க்ரூஸ் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் வேலண்டினவாக நடிக்கின்றார் என்ற போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.
மேலும், படத்தில் சிறப்பு தோற்றத்தில், ஜஸ்டின் பீபர், கிம் கார்தஷியான், அரியானா கிராண்டே போன்ற பிரபலங்களும் நடித்துள்ளனர். பென் மற்றும் ஜஸ்டின் தெராக்ஸ் எழுத்தில் உருவாகி வரும் இந்த படம் குழந்தைகளுக்கான காமெடி படமாக வரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.