pbl-740x431

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் அப்பாவைப்போலவே நடிகராகிவிட்டார்.

அவர் கதாநாயகனாக அறிமுகமான சகாப்தம் படம் ஓடவில்லை. அடுத்து தமிழன் என்று சொல் என்ற படத்தில் நடித்து வருகிறார் சண்முகப்பாண்டியன்.

இளைய மகனை சினிமாவில் இறக்கிவிட்ட விஜயகாந்த், தன்னுடைய மூத்த மகன் விஜய பிரபாகரனை அரசியலில் இறக்கப்போகிறாரோ என்று நினைத்த நேரத்தில், யாருமே எதிர்பார்க்காதவகையில், விரைவில் நடைபெற உள்ள பி.பி.எல். (PBL) என்கிற பிரீமியர்  பேட்மிண்டன் லீக் போட்டிக்கான சென்னை அணியை வாங்கி இருக்கிறார் விஜயபிரபாகரன்.

பிரீமியர் லீக் பேட்மிண்டனுக்கான ஏலம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.

இதில் சென்னை அணியை விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் ஏலம் எடுத்துள்ளார்.

இந்த அணிக்கு சென்னை ஷ்மாஷர்ஸ் (Chennai Smashers) என்று பெயர் சூட்டியுள்ளார். (இவருக்கு தமிழ் உயிர் மூச்சு இல்லை போலருக்கு)

விஜய பிரபாகரனின் சென்னை அணியில் விளையாட பி.வி. சிந்து (P.V. Sindhu), சிக்கிரெட்டி (Sikkireddy), ஜெர்ரிசோப்ரா (Jerrychopra), கிருஷ்ணபிரியா (Krishnapriya) ஆகிய இந்திய வீரர்களும், சோனி (Sony), சைமன்சன்டோசோ Simonsantoso, பியா (Pia) ஆகிய இந்தோனேஷிய வீரர்களும், மேலும் இங்கிலாந்தை சேர்ந்த கிரிஷ்ஆட்காக் (Chrisadcock), பிரான்ஸை சேர்ந்த பிரிஷ் (Brice), கனடாவை சேர்ந்த டோபி (Toby) ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

இந்த பிரீமியர்  பேட்மிண்டன் லீக்  போட்டி, தொடக்க விழா நிகழ்ச்சியோடு வரும் ஜனவரி 2-ம் தேதி மும்பையில் ஆரம்பமாகிறது.

இப்போட்டி மும்பையில் தொடங்கி சென்னை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

இதன் இறுதி போட்டி டெல்லியில் நடைபெறுகிறது.

“சென்னை அணியின் பயிற்சியாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இன்னும் யார் யார் இடம்பெறுவார்கள் என்பதை விரைவில் அறிவிப்பேன் என்றும், சென்னை ஷ்மாஷர்ஸ் அணி இந்த தொடரின் இறுதி போட்டியில் வெற்றி பெற்றால் அதில் 50% தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக அளிப்பேன்” என்றும் அணியின் உரிமையாளர் விஜயபிரபாகரன் அறிவித்துள்ளார்.

கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் போல்  பேட்மிண்டனுக்கு பி.பி.எல். என்கிற பிரீமியர்  பேட்மிண்டன் லீக் போட்டியாம். அப்படீன்னா… சென்னை அணியை ஏலம் எடுக்க பல கோடிகள் தேவைப்பட்டிருக்குமே….

விஜய்காந்த் மகனுக்கு கோடிகள் எல்லாம் ஒரு பிரச்சனையா?

Comments

comments