தூங்காவனம் படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் அடுத்து நடித்துவரும் படம் “அப்பா அம்மா விளையாட்டு”. இப்படத்தில் கமலுடன் அமலா, ஷரினா வகாப் உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனர். மலையாளத்தின் பிரபல இயக்குநரான ராஜீவ் குமார் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்துவருகிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி தயாரித்துவருகிறார் கமல்.

19_kamal_jpg_1796854f

இதற்கு நடுவே கன்னடப் படம் ஒன்றில் சிறப்புத் தோற்றத்தில் கமல் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  கன்னட திரையுலகின் மாஸ் ஸ்டார்களான சிவ்ராஜ்குமார் மற்றும் “நான் ஈ” பட வில்லன் சுதீப் இருவரின் நடிப்பில் உருவாகிவரும் படம் “காளி”. இப்படத்தில் கமல்ஹாசனை சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்பட்டது.

கமல்தரப்பில் கேட்டபோது, “ காளி படத்தில் சிறப்புத் தோற்றத்தில் கமலை நடிக்கவைப்பது சம்மந்தமாக ஒரு முறை பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இன்னும் உறுதியாகவில்லை” என்கிறார்கள்.

கன்னட சினிமாவிலேயே அதிகபட்ஜெட்டில் உருவாகும் முதல் படம் காளி. இப்படத்தின் மொத்த பட்ஜெட் 110 கோடி. 2016ல் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

Comments

comments