NTLRG_151228193207000000

தற்போதைய சூழலில் தியேட்டர்கள் கிடைக்காமல் ஏகப்பட்ட படங்கள் தயார்நிலையில் காத்திருக்கின்றன. ஒவ்வொரு வாரமும் பல படங்கள் வெளியாவதால், உரிய நேரத்தில் படத்தைத் திரைக்குக் கொண்டுவர முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலோ பல படங்கள் படை எடுக்கின்றன. 2016 ஆம் வருட பொங்கலும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்றே தோன்றுகிறது.

தற்போதைய தகவலின்படி, பாலாவின் ‘தாரை தப்பட்டை’, விஷாலின் ‘கதகளி’, ஜெயம் ரவியின் ‘மிருதன்’, சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் ஆகிய படங்கள் பொங்கல் ரிலீஸ் என்று அறிவித்துள்ளனர். இந்தப்படங்களுடன் உதயநிதி தயாரித்து நடித்துள்ள ‘கெத்து’ படமும் களத்தில் குதிக்க தயாராகி வருகிறது.

கடந்த வாரம் சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ‘கெத்து’ படத்தை பொங்கலன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின். பொங்கல் பந்தயத்தில் சுந்தர்.சி இயக்கிய அரண்மனை-2 படமும் இருந்தது. கடைசிநேரத்தில் பொங்கல்போட்டியிலிருந்து விலகி ஜனவரி 29க்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் கெத்து படம் போட்டிக்கு வந்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை சுமார் 750 தியேட்டர்களே ரிலீஸ் சென்டர் என்று சொல்லத்தக்க தியேட்டர்களாக உள்ளன. பொங்கள் அன்று 5 படங்கள் வெளியானால் ஒரு படத்துக்கு 150 தியேட்டர்களே கிடைக்கும். 150 தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்தால் போட்ட பணத்தை ஒரே வாரத்தில் எடுக்க முடியாது.

என்ன செய்யபோகிறார்கள் என்று பார்ப்போம்….!

 

Comments

comments