NTLRG_151221105539000000

சிம்பு எழுதி பாடி வெளியிட்ட பீப் சாங் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. வழக்கு, புகார்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் சரத்குமார்.

அவர் கூறியதாவது… பெண்களையோ, நம் கலாச்சாரத்தையோ தவறாக சித்தரிக்கும் பாடல் வரவேற்கத்தக்கதல்ல. சிம்பு, அனிருத்தின் பாடல் பெண்களை தவறாக சித்தரித்திருந்தால் அது தவறுதான். இந்த பிரச்சினை தொடர்பாக நடிகர் சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவிக்காதது ஏன்? கடந்த காலங்களிலும் இதுபோன்ற பாடல்கள் வெளிவந்திருக்கிறது. அப்போது இவ்வளவு தீவிரமாக எதிர்க்காதவர்கள் இப்போது ஏன் எதிர்க்கிறார்கள் என்றும் தெரியவில்லை. என்றார் சரத்குமார்.

சிம்பு பாடல் விவகாரம் குறித்து விஷால் கூறியிருப்பதாவது: சிம்புவின் பாடல் அவரின் தனிப்பட்ட விஷயம். என்றாலும் அதனை அவர் தவிர்த்திருக்கலாம். எந்த விஷயமும் நான்கு சுவர்களுக்குள் இருந்தால் யாருக்கும் பாதிப்பில்லை. திரைப்படங்களுக்கும், திரைப்பட பாடல்களுக்கும் தணிக்கை குழு இருக்கிறது. பாடலில் தவறான வரிகள் இருந்தால் அவற்றை தணிக்கை குழு நீக்கி விடுகிறது. தனியாக வெளிவரும் பாடலில் அப்படி நடப்பதில்லை. இது சிம்புவுக்கு ஆதரவான கருத்தோ, எதிரான கருத்தோ இல்லை. பொதுவான கருத்து என்கிறார் விஷால்.

 

Comments

comments