2

‘எந்திரன் 2′ படப்பிடிப்பை ஆரம்பிப்பதற்கு முன் இயக்குனர் ஷங்கர் ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தாராம். ‘எந்திரன் 2′ படப்பிடிப்புப் பற்றிய எந்த ஒரு புகைப்படமும் வெளியாகக் கூடாது என்பதை உறுதியாகச் சொன்னாராம். ‘கபாலி’ படத்தின் மலேசிய புகைப்படக் காட்சிகள் நொடிக்கொரு தரம் வெளியானது ஷங்கரை பயமுறுத்தி விட்டது போல, அதனால் ‘எந்திரன் 2′ படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் அதிகப்படியான கட்டுப்பாடு விதிக்கச் சொல்லியிருக்கிறாராம்.

படக் குழுவினர் அனைவருக்கும் ஐடி கார்டுகள் வினியோகிக்கப்பட்டு, யார் யார் எது வரை அனுமதிக்கப்படுவார்கள் என்பது முதல் அனைத்துமே திட்டமிடப்பட்டுள்ளதாம். படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்குள் நுழைவதற்குள் பல அடுக்கு பாதுகாப்புகளைத் தாண்டித்தான் போக முடியுமாம். உதவியாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவி இயக்குனர்கள் என அனைவருமே எப்படி படப்பிடிப்புத் தளத்தில் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்களாம்.

படக்குழுவினர் அல்லாது விருந்தினர்களோ, படத்திற்கு சம்பந்தமில்லாதவர்களோ அந்த எல்லைக்குள் நுழையவே முடியாது என்கிறார்கள். பொதுவாகவே ஷங்கர் இயக்கும் படங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாட்டை விட இந்தப் படத்திற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மிக அதிகம் என்கிறது கோலிவுட் வட்டாரம். ஷங்கர் அனுமதியில்லாமல் படம் பற்றிய ஒரு துரும்பும் வெளிவராது என்கிறார்கள்.

சிம்புவின் ‘பீப் சாங்’கை திருடி (?) வெளியிட்டவர்களுக்கு ஒரு சவால், எங்கே ‘எந்திரன் 2′ பற்றி எந்த ஒரு புகைப்படத்தையாவது வெளியிடுங்கள் பார்ப்போம்….

Comments

comments