devi-sri-prasad

இசையமைப்பதில் கூட தனக்கென்று ஒரு ‘தனி ட்யூனை’ வைத்திருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். போகிற போக்கில் அவருடைய பாடல்களைக் கேட்டால் இது அவர் தானே? என்று சின்னக் குழந்தை கூட கரெக்ட்டாக சொல்லி ஐக்யூவில் பாஸாகி விடும்.

அந்தளவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு டிபிக்கல்(ட்) இசையமைப்பாளராக புகழ்பெற்றவருக்கு கடந்த 2 வருடங்களாகவே ஹீரோவாக களமிறங்க வேண்டும் என்கிற ஆசை அடி மனதை அரித்துக் கொண்டே இருந்தது. அவருக்கு முன்னால் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார் என அடுத்தடுத்து இசையமைப்பாளர்கள் ஹீரோவாகி வெற்றி கண்டிருப்பது தேவிக்கு தெம்பைக் கொடுத்திருக்கிறது.

நல்ல கதையோடு ரசிகர்களை நம்பிக் களமிறங்கலாம் என்று முடிவெடுத்தவர் ஹீரோ ஆவதற்கு தயாராகி விட்டார். அதிலும் இங்கில்லையாம். அவருக்கு புடித்த திரையுலகமான தெலுங்கு தேசத்தில் ஹீரோவாகப் போகிறார். (நல்லவேளை… புயல் ஆந்திரா பக்கம் போயிருச்சு)

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாக யாரை நடிக்க வைப்பது என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அவருக்கும் நடிகை சார்மிக்கும் ஆண்டுக்கணக்கில் காதல் இருந்து வருகிறது என்று கிசுகிசு இருக்கின்ற நிலையில் அவரும் இப்போது மார்க்கெட் டவுனாகிப் போய்தான் இருக்கிறார்.

இந்த நேரத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் அவருக்கு வாய்ப்பு கொடுப்பாரா என்பதே எல்லோருடைய கேள்வியாகவும் இருக்கிறது. நல்ல முடிவா எடுங்க பாஸூ….

Comments

comments