Chennai-Thiruvaiyaru-Season-11-740x431

கடந்த 10 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் கோலகலமாக தொடங்கி அனைத்து கர்நாடக இசை ரசிகர்களையும் கவர்ந்த நிகழ்ச்சி – லஷ்மன் ஸ்ருதியின் சென்னையில் திருவையாறு.

11ஆம் வருட சென்னையில் திருவையாறு இசை திருவிழாவை இந்த மாதம் 18ம் தேதி தொடங்கவுள்ளது.

இவ்விழாவை பிரபல நடிகர், நடன இயக்குநர் மற்றும் இயக்குநர் பிரபுதேவா தொடங்கி வைக்கிறார்.

இவ்வாண்டு நடக்கவுள்ள இந்த இசைத் திருவிழாவின் சிறப்பம்சங்களையும், பல அம்சங்கள் பற்றியும் கர்நாடக இசை ஜாம்பவான்கள் விவரித்தனர்.

சமீபத்தில் சென்னையில் பெய்த கனமழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண தொகைகளை கர்நாடக இசை கலைஞர்கள் அறிவித்தனர்.

நடன கலைஞர் மற்றும் பிரபல நடிகை ஷோபனா 1 லட்சமும், கர்நாடக இசை கலைஞர் கே என் சசிகிரண் 1 லட்சமும், கர்நாட்டிகா சங்கம் சார்பாக 1 லட்சமும், மற்ற கர்நாடக இசை கலைஞர்கள் அனைவரும் சேர்ந்து 3 லட்சமும் வழங்கினர்.

மேலும் சென்னையில் திருவையாறு இசை விழாவின் மற்றுமொரு சிறப்பாக கருதப்படும் உணவுத்திருவிழாவில் உலக அதிசங்களில் ஒன்றாக கருதப்படும் ஈபில் டவரை ஒற்றாற் போல் 30 அடி உயரமான முருங்கைகாய் கோபுரத்தை பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் துவங்கி வைக்கிறாராம்.

பாக்யராஜையும் முருங்கைக்காயையும் பிரிக்கவே முடியாது போலருக்கே…

Comments

comments