3c14766d-6969-485c-b0ba-469b904346333

திரையுலகில் பிரபலமாக இருக்கிறோம் என்ற திமிரில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பொறுக்கித்தனத்தை செய்து வரும் சிம்பு பீப் ஸாங் என்ற பெயரில் இசையமைப்பாளர் அனிருத் உடன் இணைந்து உருவாக்கிய ஆபாசப்பாடல் தமிழகம் முழுக்க மிகப்பெரிய கொந்தளிப்பை உண்டாக்கி இருக்கிறது.

சிம்பு ,அனிருத் இருவருக்கும் எதிராக தமிழகம் முழுக்க பல்வேறு காவல்நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது.

நீதிமன்றங்களில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தென் சென்னை மாவட்ட செயலாளர் (வழக்கறிஞர்கள் பிரிவு) வழக்கறிஞர் காசி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள 9 ஆவது மெட்ராபாலிடன் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் சிம்பு அனிருத் மீது நேற்று வழக்கு தாக்கல் செய்தார்.

எப்போதுமே தமிழ்கலாச்சாரத்துக்கு எதிரான சம்பவங்கள் நடைபெற்றால் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியே முதல் குரல் கொடுக்கும்.

அதேபோல், பா.ம.க.வும் தைரியமாக களத்தில் இறங்கி போராடும்.

என்ன காரணத்தினாலோ (தேர்தல் வருவதாக இருக்கலாம்) சிம்புவின் ஆபாசப்பாடல் விவகாரம் தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய பிறகும் கூட விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. ஆகிய இரண்டு கட்சிகளும் அமைதியாகவே இருந்தன.

இவ்விரு கட்சிகளில் அமைதி விமர்சனத்துக்கு ஆளானது.

அதோடு, சமூகவலைத்தளங்களில் விவாதப்பொருளாகவும் மாறியது.

இந்நிலையில்தான் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வழக்கறிஞர் காசி, நேற்று சிம்பு, அனிருத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்.

தற்போது இந்த விவகாரத்தை பா.ம.க.வும் கையில் எடுத்துள்ளது என்று தோன்றுகிறது.

பா. ம.க. வை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சென்னை சைதாப்பேட்டை 23 ஆவது கோர்ட்டில் சிம்பு அனிருத் இருவருக்கும் எதிராக இன்று வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சிம்பு அனிருத் இருவருக்கும் எதிரான வழக்குகளின் எண்ணிக்கை வரும் நாட்களில் இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது.

அப்படியொரு சூழல் ஏற்பட்டால்தான் திரையுலகப்பொறுக்கிளான சிம்புவும் அனிருத்தும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாத சூழல் உருவாகும்.

Comments

comments