Kiruthiga-Udhayanidhi-Simbu-Anirudh

நடிகனாக இருக்கிறோம்… நம்மை எவனும் கேள்வி கேட்க முடியாது என்ற திமிரில் தொடர்ந்து பொறுக்கித்தனம் செய்து வரும் சிம்புவும், தன் அம்மா வயது கொண்ட நடிகையின் உதட்டைக்கவ்விய, பிஞ்சில் பழுத்த அனிருத்தும் இணைந்து உருவாக்கிய ஆபாசப்பாடல் விவகாரம் தமிழகம் முழுக்க பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

ஆபாசப்பாடலை உருவாக்கிய சிம்பு அனிருத் இருவருக்கும் எதிரான பேராட்டம் தமிழகம் முழுக்க தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, சென்னையில் உள்ள சிம்புவின் வீட்டை இந்திய ஜனநாயக மாணவர் அமைப்பு, மாதர்சங்கம் உட்பட பல்வேறு சமூக அமைப்புகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்ம் நடத்தின.

திரையுலகப்பொறுக்கிகளான சிம்பு அனிருத் மீது சமூகப்பொறுப்புமிக்க தனிநபர்கள் பலரும் அவரவர் ஊர்களில் உள்ள காவல்நிலையங்களில் புகார்களைக் கொடுத்து வருகின்றனர்.

ஆனாலும் சிம்பு – அனிருத் மீது கொடுக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை மிக… மிக… குறைவாக உள்ளது.

அவர்கள் செய்த கேடுகெட்ட காரியத்துக்கு…. தமிழகம் முழுக்க… ஊருக்கு ஊர்…. ஆயிரக்கணக்கில்….புகார் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பு, பிரபல பத்திரிகையான இண்டியா டுடே கற்பு குறித்து நடிகை குஷ்பூவிடம் கருத்து கேட்டது.

கற்பு பற்றிய தன்னுடைய கொள்கையை வெளிப்படையாகக் கூறினார் குஷ்பூ.

அவர் கூறிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதனால் சர்ச்சையில் சிக்கினார் குஷ்பூ.

பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் குஷ்பூவுக்கு எதிரான பேராட்டங்கள் நடத்தின.

அது மட்டுமல்ல, அப்போது குஷ்பூ மீது தமிழகம் முழுக்க பல்வேறு ஊர்களில் வழக்கு தொடரப்பட்டன.

அந்த வழக்குகளில் ஆஜராக கோர்ட்டுக்கு வந்த குஷ்பூ மீது விளக்குமாறும் செருப்புகளும் வீசப்பட்டன.

இந்த பிரச்சனை காரணமாக பல மாதங்கள் ஒவ்வொரு ஊருக்கும் சென்று கோர்ட்டில் ஆஜராவதையே முழு நேர வேலையாக செய்து கொண்டிருந்தார் குஷ்பூ.

கற்பு பற்றி தன்னுடைய கருத்தைத் தெரிவித்த குஷ்பூவை அன்றைக்கு ஓட ஓட விரட்டிய தமிழக மக்கள், பெண்களை இழிவுபடுத்துகிற மிக கேவலமான கேடுகெட்ட காரியத்தைச் செய்த சிம்புவை விட்டு வைப்பார்களா?

அன்றைக்கு குஷ்பூவுக்கு ஏற்பட்ட அதே நிலை தற்போது சிம்பு, அனிருத் இருவருக்கும் ஏற்பட்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது.

எனினும், சிம்பு – அனிருத் உருவாக்கிய ஆபாசப்பாடலை கேட்ட கொதித்துப் போயுள்ள பலருக்கும், இவர்கள் மீது நாம் புகார் கொடுக்க முடியமா?

நாம் புகார் கொடுத்தால் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்வார்களா?

கோர்ட்டில் நாம் வழக்கு தொடர முடியுமா?

போன்ற சந்தேகங்கள் உள்ளன.

இதன் காரணமாகவே சமூக அக்கறை கொண்ட பலரும் அமைதியாக இருக்கின்றனர்.

இந்த சந்தேகங்களுக்கு  வழக்கறிஞர் ஒருவரிடம் கருத்து கேட்டது தமிழ்ஸ்கிரீன்.காம்..

“இந்தியக் குடிமகனான எவரும், நாட்டின் எந்தப்பகுதியில் இருந்தாலும் சிம்பு, அனிருத் இருவர் மீதும் தைரியமாகப் புகார் கொடுக்கலாம்…

கோர்ட்டிலும் வழக்கு தொடரலாம்.

நீங்கள் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும்.” என்று கருத்து தெரிவித்தார்.

சமூகப்பொறுப்புள்ள ஒவ்வொருவரும் சிம்பு, அனிருத் மீது மட்டுமின்றி, அந்தப்பாடலை என் மகன் பாடவில்லை… எவனோ பாடிவிட்டான் என்று பச்சைப்பொய் சொல்லும் டி.ராஜேந்தர் மீதும் அவரவர் ஊர்களில் உள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும்.

Comments

comments