NTLRG_151212160559000000

ஆஸ்கர் விருது விழாவிற்கு முன்னோட்டமாக கருதப்படும் கோல்டன் க்ளோப் விருது விழா ஜனவரி 10ம் தேதி நடக்கவுள்ளது. 73ம் ஆண்டு கோல்டன் க்ளோப் விருது விழாவில் நாமினேஷன்ஸ் பட்டியலை ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் வெளியிட்டுள்ளது. கரோல், ரெவனன்ட் படங்கள் பலத்த போட்டியில் ஈடுபட்டுள்ளன.

கேட் பிளான்சட் நடிப்பில் வெளியான ‘கரோல்’ படம் 5 பிரிவுகளில் நாமினேஷன்ஸ் ஆகியுள்ளது. ‘த ரெவனன்ட்’, ‘மேட் மேக்ஸ்’, ‘பிக் ஷார்ட்’, ‘ஸ்டீவ் ஜாப்ஸ்’ போன்ற படங்களும் அதிக அளவில் நாமினி ஆகியுள்ளது.

கோல்டன் க்ளோப் நாமினேஷன்ஸ் பட்டியல்:

சிறந்த திரைப்படம் (டிராமா): ‘கரோல்’, ‘ஸ்பாட்லைட்’, ‘த ரெவனன்ட்’, ‘மேட்மேக்ஸ்’ மற்றும் ‘ரூம்’

 

சிறந்த திரைப்படம் (காமெடி/மியுசிக்கல்): ‘ஜாய்’, ‘த மார்ஷியான்’, ‘ட்ரெய்ன்வ்ரெக்’, ‘த பிக் ஷார்ட்’, ‘ஸ்பை’

சிறந்த நடிகர்: லியோனார்டா டிகாப்ரியோ – ‘த ரெவனன்ட்’, எட்டி ரெட்மெய்னே – ‘த டேனிஷ் கேர்ள்’, மைக்கேல் ஃபேஸ்பேண்டர் – ‘ஸ்டீவ் ஜாப்ஸ்’, வில் ஸ்மித் – ‘கன்கஷன்’

சிறந்த நடிகை: கேட் பிளான்சட், ரூனே மரா – ‘கரோல்’, ப்ரை லார்சன் – ‘ரூம்’, அலிசியா விகேன்டர் – ‘த டேனிஷ் கேர்ள்’, ஜெனிபர் லாரன்ஸ் – ‘ஜாய்’.

சிறந்த இயக்குனர்: ரிட்லே ஸ்காட் – ‘த மார்ஷியன்’, அலெஜான்ட்ரோ கான்சலேஸ் – ‘த ரெவனன்ட்’, டாம் மெக்கர்த்தி – ‘ஸ்பாட் லைட்’, டோட் ஹேய்ன்ஸ் – ‘கரோல்’ மற்றும் ஜியார்ஜ் மில்லர் – ‘மேட் மேக்ஸ்:ப்யூரி ரோட்’.

இதில் வெற்றிபெருபவர்களுக்கு ஆஸ்கார் கதவு தாராளமாக திறக்கும் என்பதால், அனைவரும் கோல்டன் க்ளோப் விருதினை எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

Comments

comments