ஹாலிவுட்டின் பிரபல நடிகையான கேமரூன் டயஸ் வெளியிட்டிருக்கும் ஒரு நிமிட வீடியோவான “ஹூயூமன்” (HUMAN) செம லைக்ஸ் குவித்துக் கொண்டிருக்கிறது.

cameron-gossip-read
அந்த வீடியோவில், “ என்னை ரசிகர்கள் சந்திக்கும் போதெல்லாம் உங்களைப் போலவே நடிகையாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறுகிறார்கள். அவர்கள் அனைவரிடமும் நான்,  “ஏன்?” என்றுதான். பொதுவாக அமெரிக்கர்கள் பிரபலங்கள் அனைவருமே வெற்றியும், மகிழ்ச்சியும் கொண்டவர்கள்” என்று அமெரிக்க வாசிகள் எண்ணுகிறார்கள், இவ்வாறு எண்ணுவது தவறு. நான் நடிகையாக இருப்பதால் புகழுடன் இருக்கிறேன் என்பது கிடையாது. புகழ் நம்முடைய வேலையின் ஒரு அங்கம்.

அதே நான் வீட்டில் குடும்பத்துடன், நண்பர்களுடன் இருக்கும்போது புகழுடன் இருக்க விரும்புவதில்லை. நானாக இருக்கவே விரும்புகிறேன். என் புகழும் பெருமையும் என்னை முன்னிலைப்படுத்துவதில்லை.

பெயரும் புகழும் உங்களை பற்றி கூறவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால் உங்களால் நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கமுடியாது. சந்தோஷத்தை என்றும் தேடிக்கொண்டே அழைய நேரிடும். புகழடைந்துவிட்டால் மகிழ்ச்சியென்பது கிடைக்காது.

எதனால் நீங்கள் ஈர்க்கப்படுகிறீகளோ, நீங்கள் எதை விரும்புகிறீகளோ அதையே செய்யுங்கள். அப்போதுதான் நீங்கள் முழுமையடைவீர்கள். அதுவே உங்கள் தனித்துவப்படுத்தும்.

– எனவே புகழைத் தேடி அழையாதீர்கள்!”

20 வருடங்களுக்கு மேலாக ஹாலிவுட்டின் டாப் ஸ்டாரா இருக்கும் கேமரூன் டயஸின் வார்த்தைகள் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. புகழைத்தேடி நாம் அழையவேண்டாம், தானாக நம்மைத்தேடி வரும் என்று கூறும் இவ்வார்த்தைகள் நம்ம ஊரு சினிமாக்காரர்களுக்கும் பிரபலங்களுக்கும் கூட பொருத்தும் தானே!….

 

Comments

comments