001

ஷங்கர் இயக்கத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடித்த படம் இந்தியன். அந்த படத்தில் அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் கமல். அதில் சுதந்திர போராட்ட தியாகியான அப்பா கமல் நடித்த தாத்தா வேடம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதோடு, சமூக விரோதிகளை அவர் களையெடுப்பதை வித்தியாசமாக படமாக்கியிருந்தார் ஷங்கர்.

அந்த வகையில், தற்போது விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நாயகனாக நடித்துள்ள நையப்புடை படமும் கிட்டத்தட்ட இந்தியன் படம் பாணியில் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, கதைப்படி ஓய்வு பெற்ற ராணுவ வீரராக நடித்திருக்கும் எஸ்.ஏ.சி., தவறு செய்பவர்களை துரத்தி சென்று அவர்கள் மீண்டும் தவறே செய்யாத அளவுக்கு நையப்புடைப்பதுதான் இந்த படத்தின் கதையாம்.

அந்த வகையில், சமூக அக்கறை கொண்ட ஒரு முதியவரின் நியாயமான கோபம்தான் இந்த படம். அதேசமயம், அவர் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதை ஹாலிவுட் பட டெக்னிக்கில் காட்சியமைத்திருக்கிறார்களாம். குறிப்பாக இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தை நினைவுபடுத்தி விடக்கூடாது என்பதால் அந்த சாயல் வராத அளவுக்கு படமாக்கப்பட்டுள்ளதாம்.

 

Comments

comments