Idhu-Namma-Aalu-bloopers-on-Valentine’s-Day

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நயன்தாரா நடிப்பில் தொடங்கப்பட்ட இது நம்ம ஆளு படம் மாதக்கணக்கில் கிடப்பில் கிடக்கிறது. சிம்புவின் கால்ஷீட் சொதப்பல் காரணமாக இது நம்ம ஆளு படப்பிடிப்புக்கு முதல் தடங்கல் ஏற்பட்டது. தொடர்ந்து படப்பிடிப்பு கேன்சல் செய்யப்பட்டதால் நயன்தாரா கொடுத்த கால்ஷீட் வீணடிக்கப்பட்டது. அதனால் கடுப்பான நயன்தாரா இனிமேல் கால்7ட் தர மாம்டேன் என முரண்டு பிடிக்க ஆரம்பித்தார்.

சில காட்சிகளும், ஒரு பாடல் காட்சியும் எடுக்கப்பட வேண்டி இருக்கிறது. ஆனால் நயன்தாரா கால்ஷீட் தர மாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டார். இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் டி.ராஜேந்தர். இந்நிலையில் அந்தப்பாடல் காட்சியை எடுக்காமலே இது நம்ம ஆளு படத்தை வெளியிட உள்ளனர். கடந்த சில தினங்களாக இது நம்ம ஆளு படத்துக்கு பப்ளிசிட்டி செய்யப்பட்டு வருகிறது. அதில் நயன்தாராவை இருட்டடிப்பு செய்து, ஆண்டரியாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

 

Comments

comments