kushbu-740x431

பொறுக்கியாய் வளர்ந்து நிற்கும் நடிகர் சிம்புவும், பிஞ்சில் பழுத்த அனிருத்தும் உருவாக்கிய ஆபாசப்பாடல் விவகாரத்தில் தமிழகமே கொந்தளித்துக் கிடக்கிறது.

பல்வேறு மாணவர், மகளிர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

சமூகப்பொறுப்புமிக்கவர்கள் இவ்விரு பொறுக்கிகள் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்து வருகின்றனர்.

சென்னையை மூழ்கடித்த வெள்ள சோகத்தை மறக்கடிக்குமளவுக்கு விஸ்வரூபமெடுத்து வருகிறது – விகாரபுத்தி கொண்ட சிம்பு, அனிருத் விவகாரம்.

ஆனால் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த யாரும் இதைப்பற்றி கண்டுகொள்ளவே இல்லை.

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவி ஏ.மகேஸ்வரி, “சிம்பு மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.” என்று குரல் கொடுத்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியோ சிம்புவை உடனடியாய் கைது செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறது.

மற்ற எந்த கட்சியும் இது பற்றி கருத்து தெரிவிக்கவே இல்லை.

அ.தி.மு.க.வை விடுங்கள். அம்மாவிடமிருந்து அனுமதி வரவே ஆறு மாதங்களாகும்.

மற்ற கட்சிகள்?
தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., ச.ம.க., காங்கரஸ், த.ம.க., விடுதலைசிறுத்தைகள், பா.ஜ.க. ஒரு கட்சியும் இது பற்றி வாயைத் திறக்கவில்லை.

சிம்பு, அனிருத் என்கிற திரையுலகப்பொறுக்கிகள் இப்படியொரு ஆபாசப்பாடலை உருவாக்கியது இந்தக்கட்சியின் தலைவர்களுக்கு தெரியாதா?

அல்லது சிம்பு போன்ற சில்லறைப் பயலை பெரிய ஆளாக்க வேண்டாம் என்று நினைத்துவிட்டார்களா என்று தெரியவில்லை?

என்னதான் அரசியல் கட்சி என்றாலும், தே.மு.தி.க. விஜயகாந்தும், ச.ம.க. சரத்குமாரும் அடிப்படையில் சினிமாக்காரர்கள். எனவே, அவர்களிடமிருந்து ஆபாசப்பாடலுக்கு கண்டனமோ எதிர்ப்போ வர வாய்ப்பில்லை.

கற்பு விஷயத்தில் குஷ்பூவை துரத்தி துரத்தி அடித்த விடுதலை சிறுத்தைகள் இந்த விஷயத்தில் மௌனம் காப்பது ஆச்சர்யத்தை மட்டுமல்ல, விலைபோய்விட்டனரோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

பா.ஜ.க. கட்சியின் தமிழக தலைவராக இருக்கும் பெண்மணி எதற்கெடுத்தாலும் கருத்து சொல்வார். பீப் ஸாங் (Beep Song) பற்றி மூச் விடவில்லை. பீப் (Beef) சாப்பிடுபவர்களைப் பற்றித்தான் தொண்டையைத் தொறப்பார் போலிருக்கிறது.

இவரைப்போலவே தமிழக அரசியலில் கருத்து கந்தசாமியாக இருப்பவர்கள் இருவர்…

ஒருவர் டாக்டர் ராமதாசு. ஏனோ இவரும் வாயடைத்து இருக்கிறார்.

இன்னொருவர்.. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இவருக்கு கடந்த பத்து நாட்களாக பல் வலி போலிருக்கிறது.

இவரை விடுங்கள் இவரது கட்சியில் இரண்டு பெண் தெய்வங்கள் குடியிருக்கின்றன.

ஒன்று.. விஜயதரணி.

இன்னொன்று.. குஷ்பூ.

விஜயதரணி சிம்புவின் ரசிகை போலிருக்கிறது. வாயையே திறக்கவில்லை.

இவரைவிட குஷ்பூவின் செயல் கண்டிக்கத்தக்கது.
simbu-with-kushbooகடந்த சில வருடங்களாக, ஒரு பக்கம் சினிமா நடிகையாகவும்…. இன்னொரு பக்கம் அரசியல்வாதியாகவும் இரட்டை வேடம் போட்டு வருகிறார் குஷ்பூ.

என்னதான் அரசியல்வாதி வேடம் போட்டாலும், தான் இன்னும் நடிகைதான் என்பதை சிம்பு விஷயத்தில் நிரூபித்துவிட்டார் குஷ்பூ.

ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் தனக்கு சம்மந்தமில்லாதபல்வேறு விஷயங்கள் பற்றி கருத்து சொல்வதை வழக்கமாக வைத்துள்ள குஷ்பூ, சிம்புவும் அனிருத்தும் உருவாக்கிய பீப் ஸாங் என்ற ஆபாசப்பாடல் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

தமிழகம் முழுக்க போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சிம்புவுக்கு எதிரான போராட்டக்காட்சிகள் சேனல்களில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன.

சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு தரப்பினரின் கடும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இத்தனைக்கும் பிறகும் குஷ்பூ மிக கவனமாக இது பற்றி வாயைத்திறக்காமல் அமைதி காக்கிறார்.

ஆபாசப்பாடல் பற்றி ட்விட்டரில் கண்டிக்காதது மட்டுமல்ல,

“எனக்கும் அதற்கும் சம்மந்தமே இல்லை… அதை நான் பாக்கவே இல்லை… அதில் என்ன இருக்குன்னே தெரியலை… தேவையில்லாத விஷயத்தைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை”

என்று ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கருத்து சொல்லி இருப்பது கண்டிக்கத்தக்கது.

குஷ்பூ போன்ற சினிமாக்காரர்கள் என்னதான் அரசியல்வாதி வேடம் போட்டாலும் இதுபோன்ற விஷயத்தில் அவர்களது அரிதாரம் கலைந்துவிடுகிறது.

மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Comments

comments