3c14766d-6969-485c-b0ba-469b904346333

அழகு இருக்கும் இடத்தில் புகழும், பாராட்டும் தானே வந்து சேரும் என்பதை மூன்றாவது முறையாக நிரூபித்துவிட்டார் பிரியங்கா சோப்ரா. இவர் ஆசியாவின் செக்ஸியான பெண்கள் பட்டியலில் இந்த வருடம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

ஒவ்வொரு வருட இறுதியிலும் ஆசியாவின் செக்ஸியான ஐம்பது பிரபலங்களின் பட்டியலை பிரிட்டிஷின் “ஈஸ்டன் ஐ” என்ற பத்திரிகை வெளியிடும். இந்த வருடத்திற்கான செக்ஸியான ஆசியப் பெண்கள் பட்டியலில் பிரியங்காவை முதலிடத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளனர். டாப் 10 இடங்களில் 10வது இடத்தில் உள்ள பாகிஸ்தானின் மஹிராகான் தவிர மற்ற அனைவரும் இந்தியர்களே! இந்த டாப் 10 பிரபலங்கள் பற்றியான ஹாட் அண்ட் ஸ்வீட் தகவல்கள் இதோ,

01. பிரியங்கா சோப்ரா:

Priyanka Chopra Saree Images

தொடர்ந்து மூன்றாவது முறையாக டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ள பாலிவுட் நடிகை பிரியங்கா. தொடர்ந்து இவர் டாப் பட்டியலில் தன் பெயரை தக்கவைத்ததற்கு மேரிகோம் மற்றும் தில் தக்னே டோ படங்களே காரணம். அதுமட்டுமின்றி இவர் நடித்து வரும் அமெரிக்க சீரியலான “குவாண்டிகோ”வில் இவரின் கவர்ச்சியான நடிப்பு உலகளவில் பிரபலப்படுத்தியது மட்டுமின்றி இவரின் வெற்றிக்குத் துணையாக நின்றது. இந்த செக்ஸி லேடிக்கு வயது 33.

02. சனாயா இரானி:

sanana

மாடலாகத் தொடங்கி சின்னத்திரையில் பேசப்படும் ஹாட் அண்ட் பியூட்டி நடிகை சனாயா. அமீர்கான், கஜோல் நடித்து வெளியாகி ஹிட் அடித்த ஃபனா படத்தில் முக்கிய வேடத்தில் திரைத்துறையில் அறிமுகமானார். பின்னர் இவர் நடித்து வெளியான “மெல்லி ஜாப் ஹம் தும்” என்ற டிவி சீரியலில் நடித்ததால் இளசுகள் இணையத்தில் தேடித் தேடி ஃபாலோ செய்யும் பிரபலமானார். டாப் நடிகைகளையே ஓவர்டேக் செய்து ரசிகர்களின் நட்சத்திரப் பெண்ணாக வலம்வருகிறார். டிவி சீரியலில் தொடங்கி ரியாலிட்டி ஷோ வரைக்கும் இவர் வந்தால் கவர்ச்சிக்கும் விருவிருப்புக்கும் பஞ்சமில்லை. ஊட்டியில் தான் அம்மிணி படிச்சிருக்கு என்பது ஸ்பெஷல் செய்தி. இந்த வருடம் வெளியான “ ஜலக் டிக்கால ஜா” என்ற நிகழ்ச்சியே இவருக்கு இரண்டாம் இடத்தை வாங்கிக் கொடுத்துள்ளது.

03. டிராஸ்டி தாமி:

Drashti-Dhami-hot-performance-Jhalak-Dikhhla-Jaa11

பாலிவுட் இளவுகளின் தூக்கத்தைக் கெடுக்கும் மற்றுமொரு செக்ஸியான டிவி நடிகை தான் டிராஸ்டி தாமி. இவரின் “சயான் தில் மெயின் ஆனா ரே” ஆல்பம் இவரை படுஃபேமஸாக்கிவிட்டது. இவரின் அடுத்தடுத்த டிவி சீரியல்ஸ், ரியாலிட்டி ஷோ ஆகியனவற்றால் டிவி பிரியர்களின் கனவுக்கன்னி இவர். ஆசிய செக்ஸியான பெண்கள் பட்டியலில் 2012ல் மூன்றாவது இடம், 2014ல் இரண்டாவது இடம் இப்போ மூன்றாவது இடம்.

04. தீபிகா படுகோன்:

deepika-padukone-hot-photos-sexy-wallpaper-stills-shoots-widescreen-high-definition-desktop-background-free11

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் தீபிகா. கடைசியாக இவரின் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்திருக்கும் படம் தமாஸா. எதார்த்தமான நடிப்பு, இடத்திற்குத்தேவையான கவர்ச்சி, குத்துப்பாடல்களில் தாராளம் இதுவே தீபிகா. பி.ஏ. பட்டப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய இந்த லேடி, ஒரு படத்தில் நடிக்க 7 முதல் 9 கோடி சம்பளம் வாங்குகிறாராம். இவர் அறிமுகமான முதல் படம் “ஓம் சாந்தி ஓம்” தெறி ஹிட். அன்று தொடங்கி அடுத்தடுத்து எல்லாப் படங்களுமே இவர் நம்பர் ஒன் நடிகையாக மாறக்காரணம் எனலாம்.

05. காத்ரீனா ஃகைப்:

kartina-kaif

இந்தியாவைச் சேர்ந்த மொகமது ஃகைப்புக்கும், பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த சுசானாவிற்கும் மகளாக பிறந்த 60kG காஸ்மீரி பெண் காத்ரீனா. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதை சிப்ஸ் சாப்பிடுவது போல ஈஸியாக எடுத்துக்கொள்ளும் ஈஸிகோயிங் பெண்மணி. சல்மான்கானுடனும், ரன்பீர் கபூருடனும் காதலாகி காற்றில் கரைந்தவர். தொடர்ந்து எட்டு வருடங்களாக ஆசியாவின் செக்ஸியான பெண்கள் பட்டியலில் இவரின் பெயர் இருக்கும்.

06. நியா ஷர்மா:

Nia-Sharma_ucm1

பாலிவுட்டின் மிகமுக்கியமான டிவி நடிகை நியா. டிவி ரசிகர்களின் டாப் மோஸ்ட் ஃபேவரைட் நடிகை.

07. கரீனா கபூர்:

Kareena-Kapoor-hot-in-a-Red-Saree-2-113

முப்பத்தைந்து வயதிலும் இன்றும் இளமையுடன் இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் நடிகை கரீனா கபூர்கான். 2001ல் அபிஷேக் பச்சனுடன் ரிஃவ்யூஜ் படத்தின் மூலம் அறிமுகமானவர். சினிமா பின்னணியிலிருந்து வந்ததால் எளிதில் உச்சத்தைத் தொட்டவர். இந்த வருடம் வெளீயான கப்பர் இஸ் பேக், பஜ்ரங்கி பைஜான் படத்தில் கரீனா பேசப்பட்டதால் ஆசிய செக்ஸி லிஸ்டில் ஏழாவது இடம் இவருக்கு.

08. கவ்கர் கான்

Gauhar-Khan-Hot-Eating-Kulfi-12

இந்தி, தெலுங்கு, பஞ்சாபி என்று சுற்றிலும் பிஸியாக இருக்கும் ஹாட் நடிகை கவ்கர் கான். இந்த வருடம் மட்டும் நான்கு படங்கள் ரிலீஸாகியிருக்கின்றன. ஓவ்வொரு படமும் ஒவ்வொரு வெரைட்டியில் கவர்ச்சியில் ஈர்த்திருக்கிறார்.

09. சோனம் கபூர்:

sonam-1

அழகிலும் கவர்ச்சியிலும் ஒருசேர நடித்து க்ளாசிக் ஹாட் நடிகையாக வலம் வருபவர் சோனம்கபூர். டோலி கி டோலி, பிரேம் ரத்தன் தனபாயோ இவ்விரு படங்களும் இந்தவருட வரவு. அதுமட்டுமின்றி ஹிரித்திக் ரோஷனுடன் இவர் நடித்த தீரே தீரே பாப் ஆல்பம் இணையத்தில் வைரல் ஹிட்.

10. மஹிரா கான்:

mahira-khan-1

ஆசியாவின் செக்ஸியான பெண்கள் பட்டியலில் டாப் 10ல் இடம்பிடித்திருக்கும் மஹிரா கான் பாகிஸ்தான் நடிகை. டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தொடங்கி இப்போது படங்களில் நாயகியாக நடித்துவருகிறார். ஷாருக்கான் நடிக்கும் ரேஸ் படத்தில் ஷாருக்கிற்கு மனைவியாக நடிக்கிறார். வெல்கம் டூ இந்தியா!

 

Comments

comments