2

மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் ரீ-எண்ட்ரி கொடுத்தபோது கூட அரவிந்த் சாமியை எந்த இயக்குநரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் ரிலீசாகி வசூலை வாரிக்கொண்டிருக்கும் தனி ஒருவன் படத்திலிருந்து எல்லா இயக்குநர்களின் பார்வையும் அவர் பக்கம் திரும்ப ஆரம்பித்திருக்கிறது.

படத்தில் அவருடைய நடிப்பைப் பார்த்து பாராட்டதவர்களே இல்லை. இதனால் ஆளாளுக்கு அவரை தங்கள் படங்களில் கமிட் செய்ய போட்டிபோட்டு படையெடுக்கிறார்கள்.

ஏற்கனவே இயக்குநர் பாலா தன் படத்தில் கமிட் செய்து விட்டார். அடுத்து தனி ஒருவனின் தெலுங்கு பதிப்பிலும் வில்லனாக அரவிந்த் சாமியையே கமிட் செய்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து ஜெயம்ரவி நடிக்கப் போகும் புதுப்படம் ஒன்றிலும் அரவிந்த் சாமியை கமிட் செய்திருக்கிறார்கள். ரோமியோ ஜூலியட் இயக்குநர் லஷ்மணன் இயக்கும் இப்படத்தில் இரண்டாவது ஹீரோவாம் அரவிந்த் சாமி.

இதில் கொடுமை என்னவென்றால், யார் கால்ஷீட் கேட்டுப்போனாலும் எனக்கு நடிக்கிற ஐடியா இல்லை என்று முதல் குண்டை தூக்கிப் போடுகிறார் அரவிந்த். அதற்கப்புறம்? அரவிந்து நினைத்ததுதான் நடக்கிறது. எவ்வளவு வேணும்னாலும் கேளுங்க. தர்றோம். இப்படியொரு பதிலை சொல்லாதீங்க என்று கெஞ்ச ஆரம்பிக்கிறார்கள். பேரமே இல்லாமல் பேஸ்மென்ட் ரெடி.

அரவிந்த்சாமி ஐடியா யாருக்குய்யா வரும்?

Comments

comments