3c14766d-6969-485c-b0ba-469b9043463333

விஜய்க்கு ஜோடியாக கத்தி படத்தில் நடித்த சமந்தா, தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 59வது படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், ஏற்கனவே வேட்டைக்காரன் படத்தில் அனுஷ்காவை ரயிலில் கண்டதும் காதல் கொள்ளும் விஜய், சில நிமிடங்களில் அவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாகி விடுவது போன்றும் கற்பனை செய்து பார்ப்பார். ஆனால் இந்த படத்தில் சமந்தா நிஜமாலுமே விஜய்க்கு மனைவியாகத்தான் நடிக்கிறாராம்.

ஆரம்பத்தில் காதல் கொள்ளும் அவர்கள் பின்னர் கல்யாணமும் செய்து கொள்கிறார்களாம். அதையடுத்து அவர்களுக்கு ஒரு மகள் பிறக்கிறாராம். அந்த மகளாகத்தான் மாஜி நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்துள்ளார். ஆக, ஒரு குடும்ப செண்டிமென்ட் பாடலில் விஜய்-சமந்தா-நைனிகா ஆகியோர் நடிக்கிறார்களாம். அந்த பாடலை தற்போது கோவாவில் படமாக்கி வருகிறார் அட்லி. அதோடு விஜய்- எமிஜாக்சன் சம்பந்தப்பட்ட ஒரு கனவு பாடலும் அங்கு படமாகிறாம்.

இதையடுத்து வருகிற 26-ந்தேதி அன்று விஜய் 59வது படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதாக டைரக்டர் அட்லி அறிவித்துள்ளார்.. அன்றைய தினத்தில் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத அப்படத்தின் டைட்டீலும் அறிவிக்க வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.

 

Comments

comments