3c14766d-6969-485c-b0ba-469b9043463333

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்த் இப்போதும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனபோதும், அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய்-அஜித் ஆகிய இருவரில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் என்கிற சர்ச்சை கடந்த சில ஆண்டுகளாகவே நிலவி வருகிறது. இதுகுறித்து சில பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களில் ரசிகர்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி, ஒருவர் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்றும், இன்னொருவர் அஜித் என்றும் அவ்வப்போது ஏதாவது ஒரு பரபரப்பு செய்தியை கொளுத்திப்போட்டு வருகின்றனர். அதோடு, மேற்படி இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் இணையதளங்களில் தங்களது அபிமான ஹீரோக்களே அடுத்த சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டு மோதிக்கொண்டு வருவதும் தொடர்கதையாகியிருக்கிறது.

இந்த நிலையில், தற்போது விஜய்யுடன் ‘தெறி’ படத்தில் நடித்து வரும் லண்டன் நடிகை எமிஜாக்சன், தனது டுவிட்டர் பக்கத்தில் ‘தெறி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை போட்டு அதோடு விஜய் சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டுள்ளர்.

12308470_1700281806861864_2676282599152144642_n

 

Comments

comments