download

அட்லீ இயக்கத்தில் தற்போது தாறுமாறு படத்தில் நடித்து வரும் விஜய்யின் 60-ஆவது படத்தை இயக்கப் போவது யார் என்ற சஸ்பென்ஸ் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. விஜய்யை வைத்து ஏற்கனவே ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன் விஜய் 60 படத்தை இயக்க இருப்பது முடிவாகிவிட்டது.

விஜய் நடித்த கில்லி விக்ரம் நடித்த ‘தில்’, சிம்பு நடித்த ‘ஒஸ்தி’, அஜித் நடித்த ‘வீரம்’ உட்பட பல படங்களின் வசனகர்த்தாவான பரதன், விஜய்யை வைத்து ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கினார். அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப்பெறாதநிலையில் நந்தா நடித்த அதிதி என்ற படத்தை இயக்கினார். அந்தப்படமும் ஓடவில்லை. அதன் பிறகு விஜய்யை சந்தித்து ஒரு கதை சொன்னார் பரதன். அந்தக்கதையில் இம்ப்ரஸ்ஸாகி தற்போது அவரை இயக்குராக்கி இருக்கிறார் விஜய்.

இந்த நிலையில், இப்படத்திற்கு யார் இசை அமைப்பாளர், யார் கதாநாயகி போன்ற எதிர்பார்ப்புடன் கூடிய பல கேள்விகள் விஜய் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தற்போதைய தகவலின்படி விஜய் 60 படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. ஏற்கனவே விஜய்யுடன் ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார் காஜல் அகர்வால். தற்போது விஜய்யின் 60ஆவது படத்திலும் ஜோடியாக நடிப்பதன் மூலம் ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’ ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவதுமுறையாக விஜய்யுட இணையவிருக்கிறார் காஜல் அகர்வால்.

 

Comments

comments