3c14766d-6969-485c-b0ba-469b904346333

பத்துஎண்றதுக்குள்ள படம் எதிர்பார்த்தபடி போகவில்லை. இதனால் அடுத்து கோலிசோடா போலவே குறைந்தசெலவில் ஒரு படம் இயக்கிவிடலாம் என்று இயக்குநர் விஜய்மில்டன் முடிவுசெய்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

விஜய்மில்டன் அடுத்து ஒரு திரைக்கதையைத் தயார் செய்துவிட்டார் என்றும் அதைப்படமாக்கும் தொடக்கக்கட்ட வேலைகள் ஆரம்பமாகிவிட்டன என்றும் சொல்கிறார்கள். அந்தப்படத்தில் நாயகனாக நடிக்கவிருப்பவர் டி,ராஜேந்தராம். அவர் முக்கியவேடத்தில் நடிக்கிறார் என்றதுமே படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு வருமென்பதால் அவரை நடிக்கவைக்க எண்ணியிருக்கலாம்.

கோலிசோடா படத்தில் நடித்த நடிகர்கள் படத்தின் வெற்றிக்கு முக்கியக்காரணமாக இருந்தார்கள். நடிகர்கள் தேர்வில் விஜய்மில்டன் கவனமாக இருந்ததால் அந்த வெற்றி சாத்தியமானது என்று அப்போதே பலரும் சொன்னார்கள். இப்போதும் அதேகவனத்தோடு நடிகர்கள் தேர்வில் அவர் ஈடுபடுகிறார் என்றும் அதனாலயே டி.ராஜேந்தரைத் தேர்வு செய்திருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

இதுபற்றி டி.ராஜேந்தரிடம் கேட்டால், உறுதியாகாத எதையும் நான் சொல்லமாட்டேன் என்கிறார். இது சம்பந்தமாகப் பேச்சு நடக்கிறதா? என்று கேட்டால், பேச்சு நடக்கிறது ஆனால் உறுதியாகாமல் அதைப்பற்றி நான் எதுவும் சொல்லமாட்டேன் என்கிறார்.

Comments

comments